உதவினார் ரொனால்டோ; வென்றது மான்செஸ்டர்

மான்­செஸ்­டர்: சாம்­பி­யன்ஸ் லீக் தகு­திச்­சுற்று போட்டி ஒன்­றில் நேற்று முன்­தி­னம் பின்­னி­ரவு இத்­தா­லி­யின் அட்­ட­லாண்டா குழு­வுடன் மோதிய மான்­செஸ்­டர் யுனை­டெட் 0-2 என்று முதல் பாதி ஆட்ட இறு­தி­யில் பின்­தங்­கி­யது.

பின்­னர் இரண்­டாம் பாதி ஆட்­டத்­தில் முனைப்­பு­டன் விளை­யா­டிய யுனை­டெட் அணி இறு­தி­யில் 3-2 என்ற கோல் எண்­ணிக்­கை­யில் வெற்றி பெற்­றது.

ஆட்­டத்­தின் 81ஆவது நிமி­டத்­தில் யுனை­டெட்­டின் வெற்றிக் கோலை அதன் நட்­சத்­திர வீரர் கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ போட்டு வெற்­றிக்கு வழி­வ­குத்­தார்.

சென்ற சனிக்­கி­ழமை இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் ஆட்­டம் ஒன்­றில் லெஸ்­டர் குழு­வி­டம் 4-2 எனத் தோல்­வியைத் தழு­விய யுனை­டெட் முதல் பாதி ஆட்ட முடி­வில் இரண்டு கோல்­கள் விட்­டுக்­கொ­டுத்து பின்­தங்­கியபோது அதன் ரசி­கர்­கள் கேலிக்­கூச்­சல் போட்­ட­தா­க­வும் குழு­வின் நிர்­வா­கி­யான ஒலே குனார் சோல்­சி­யா­ருக்கு மிகுந்த நெருக்­கடி ஏற்­பட்­ட­தா­க­வும் செய்­தித் தக­வல்­கள் கூறு­கின்­றன.

அட்­ட­லாண்டா குழு­வின் முதல் கோலை ஆட்­டத்­தின் 15ஆவது நிமி­டத்­தில் மரியோ பச­லிச் போட்­டார். பின்­னர் ஆட்­டத்­தின் 29ஆவது நிமி­டத்­தில் அட்­ட­லாண்­டா­வின் டெமி­ரேல், கார்­னர் வாய்ப்­பின் மூலம் வந்த பந்தை தலை­யால் முட்டி அட்­ட­லாண்டா 2-0 என முன்­னிலை பெற உத­வி­னார்.

இரண்­டாம் பாதி­யில் ஆட்­டத்­தின் போக்கை மாற்­ற­வும் யுனை­டெட்­டின் வேகத்தை அதி­க­ரிக்­க­வும் பால் பொக்பா, ஜாடோன் சாஞ்சோ, எடின்­சன் கவானி ஆகி­யோரை சோல்­சி­யார் கள­மி­றக்­கி­னார்.

ஆட்­டத்­தின் 53ஆவது நிமி­டத்­தில் சக விளை­யாட்­டா­ளரான புருனோ ஃபெர்னாண்­டஸ் கொடுத்த பந்தை திட­லின் இட­து­பக்­க­மாக வந்த இங்­கி­லாந்­தின் மார்க்­கஸ் ரேஷ்­ஃபர்ட், மிக லாவ­கமாக அட்­ட­லாண்டா வலைக்­குள் புகுத்தி யுனை­டெட்­டுக்கு முதல் கோலைப் பெற்றுத் தந்­தார். அதே வேகத்­தில் தொடர்ந்து விளை­யாடிய யுனை­டெட், ஆட்­டத்­தின் 75ஆவது நிமி­டத்­தில் மீண்­டும் புருனோ ஃபெர்னாண்­டஸ் கொடுத்த பந்தை யுனை­டெட் அணி­யின் தலை­வர் ஹேரி மெக்­கு­வையர் கோல் வலைக்­குள் செலுத்­தி­னார்.

ஆட்­டத்­தின் 81வது நிமி­டத்­தில் லுக் ஷா கொடுத்த பந்தைச் சரி­யான தரு­ணம் பார்த்து எம்­பிக் குதித்த ரொனால்டோ தலை­யால் முட்டி கோலாக்­கி­னார்.

பல முறை தமது விளையாட்டு சாக­சத்­தால் மான்­செஸ்­டர் யுனை­டெட்டைக் காப்­பாற்­றிய ரொனால்டோ இம்­மு­றை­யும் அதை செய்­யத் தவ­ற­வில்லை என காற்­பந்து விமர்­ச­கர்­கள் புகழ்­மாலை சூட்­டு­கின்­ற­னர்.

இவ­ரது கோல் பற்றி கூறும் யுனை­டெட் அணி­யின் தலை­வர் மெக்­கு­வ­யர், "அவர் எம்­பிக் குதித்த விதம், பந்து வருவதைப் பார்த்து அவர் எம்­பிய தருணம், பந்தை கோல் வலை­யின் மூலை­யில் செலுத்­திய எல்­லாமே கன­கச்­சி­தம் என புக­ழா­ரம் சூட்­டி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!