லுக்காகுவுக்கு காயம்; கவலையில் செல்சி

லுக்காகுவுக்கு காயம்; கவலையில் செல்சி

1 mins read

மான்­செஸ்­டர்: நேற்று முன்­தி­னம் பின்­னி­ரவு நடை­பெற்ற மற்­றோர் ஆட்­டத்­தில் செல்சி அணி மால்மோ அணியை 4-0 என்ற கோல் கணக்­கில் வென்­றது. ஆனால், ஆட்ட முடி­வில் செல்­சி­யின் இரு தாக்கு­தல் வீரர்­க­ளான லுக்­காகு, டிமோ வெர்­னர் ஆகிய இரு­வ­ருக்­குமே காயம் ஏற்­பட்டது.

இனி சிறிது காலத்­திற்கு அவர்கள் கள­மி­றங்க முடி­யாதநிலை அக்­கு­ழு­வின் நிர்­வாகி தாமஸ் டுக்­க­லுக்கு கவ­லை­ய­ளித்­துள்­ளது.

ஜோர்­கின்யோ செல்­சி முதல் கோலைப் போட்­டார். பின்­னர் சரசர­வென்று மேலும் மூன்று கோல்­களைப் போட்டு செல்சி வென்­றது. ஆனால், இதில் மற்­றோர் செல்சி வீர­ரான டிமோ வெர்­ன­ருக்­கும் காயம் ஏற்­பட, செல்சி குழு­வுக்கு நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது.