டி20 கிண்ணம் வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்பு: ஸ்டீவ் ஸ்மித் கணிப்பும் ரசிகர்கள் எச்சரிக்கையும்

அபு­தாபி: இந்­திய அணி­தான் டி20 கிண்ணத்தை வெல்­லும் என ஆஸ்தி­ரே­லிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரி­வித்­துள்­ளார்.

ஐசிசி டி20 உல­கக்­ கிண்ண­த் தொ­டர் தகு­திச்­சுற்று ஆட்­டங்­கள் கடந்த அக்­டோ­பர் 17ஆம் தேதி தொடங்கி நடந்து வரு­கின்­றன. அக்­டோ­பர் 23ஆம் தேதி சூப்­பர் 12 போட்­டி­கள் தொடங்­கு­கின்­றன.

இந்­திய அணி தனது முதல் லீக் போட்டியாக வரும் அக்­டோ­பர் 24ஆம் தேதி­யன்று பாகிஸ்­தானை எதிர்­கொள்­கிறது.

பயிற்சிப் போட்­டி­களில் இங்­கிலாந்து மற்­றும் ஆஸ்­தி­ரே­லிய அணி­களை இந்­தியா வென்றது.

இந்­தியா-ஆஸ்­தி­ரே­லியா பயிற்­சிப் போட்டி முடிந்­த­தும் பேசிய ஆஸ்­தி­ரே­லிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், "இந்­திய அணி­யில் பந்து போடு­தல், பந்து அடித்­தல் இரண்­டும் சரி­யாகப் பொருந்தி மிக பல­மான அணி­யாகத் திகழ்­கிறது. வெற்றி பெறக்கூடிய அனு­ப­வ­மிக்க வீரர்கள் அதில் உள்­ள­னர். எனவே இந்த முறை இந்­திய அணிதான் கிண்ணத்தை வெல்­லும் என நினைக்­கி­றேன்," என்­றார்.

என்­றா­லும் ஸ்டீவ் ஸ்மித் இப்­படி கூறி­வ­ரு­வது அவ­ரின் தந்­திரம் என்­றும் அவர் ஆசை காட்டி திசை திருப்­பு­கி­றார் என்­றும் இந்திய ரசிகர்­கள் பல­ரும் கருத்து தெரி­வித்து வரு­கி­றார்­கள்.

"இந்­திய அணித்தலைவர் விராத் கோஹ்லிக்கு கொஞ்­சம் உசுப்­பேத்­தி­விட்­டால் ஆர்­வக்­ கோ­ளா­றால் அவர் சொதப்பி ­வி­டு­வார். "அது தெரிந்­து­ வேண்டு­மென்றே விராத் கோஹ்லி­யின் அணி­தான் உல­கக் கிண்ணத்தை வெல்லும் என்று ஸ்டீவ் ஸ்மித் ஆசைகாட்டி திசை தி­ருப்­பு­கி­றார்.

"இந்­திய வீரர்­கள் இத­னைக் கண்­டுகொள்­ளா­மல் ஆட்­டத்­தில் கவ­னம் செலுத்த வேண்­டும்," என ரசி­கர்­கள் கருத்து கூறி வரு­வதாக இந்­திய ஊட­கங்­கள் தெரி­வித்­து உள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!