பாரிஸ்: பாரிஸ் செயின்ட் ஜெர்மானுக்கு லீக்கில் இன்னும் கோலடிக்கவில்லை காற்பந்து நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி. பிஎஸ்ஜிக்கும் அதன் பரம வைரியான ஒலிம்பீக் மார்செய்க்கும் இடையிலான லீக் ஆட்டம் கோலின்றி சமநிலையில் முடிந்தது. தப்பாட்டம் காரணமாக பிஎஸ்ஜியின் ஹக்கிமி நீக்கப்பட்டார்.
பிரஞ்சு லீக்கில் இதுவரை நான்கு ஆட்டங்களில் விளையாடியுள்ள மெஸ்ஸி, யுயேஃபா சாம்பியன்ஸ் லீக்கில் தொடர்ந்து கோலடித்து வருகிறார். அதே உற்சாகத்தை லீக்கிலும் காண ஆவலுடன் இருக்கின்றனர் ரசிகர்கள். பார்சிலோனா மட்டுமின்றி இதர அணிகளுக்கும் சிறப்பாக ஆடமுடியும் எனக் காட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார் மெஸ்ஸி.

