13வது முயற்சியில் கிட்டிய வெற்றி

துபாய்: உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் 13 ஆட்­டங்­களில் முதன்­மு­றை­யாக பரம வைரி­யான இந்­தி­யாவை வென்­றுள்­ளது பாகிஸ்­தான், அது­வும் 10 விக்­கெட் வித்­தி­யா­சத்­தில். டி20 எனும் 20 ஓவர்­கள் உள்ள ஆட்­டத்­தில் இந்­தியா இதற்கு முன் 10 விக்­கெட் இழப்­பு­டன் தோல்­வி­யுற்­ற­தில்லை. அதே வித்­தி­யா­சத்­தில் பாகிஸ்­தான் இதற்கு முன் எந்த டி20 ஆட்­டத்தை வென்­ற­தும் இல்லை.

பாகிஸ்­தா­னுக்கு மிகச் சிறப்­பாக ஆடி­னார் அணித் தலை­வர் பாபர் ஆசம். 52 பந்­து­களில் 68 ஓட்­டங்­களை எடுத்த அசாம், 57 ஓட்­டங்­களை எடுத்த இந்­திய அணித் தலை­வர் விராத் கோஹ்­லி­யை­யும் மிஞ்­சி­னார்.

நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற ஆட்­டத்­தில் பாகிஸ்­தா­னின் அபார ஆட்­டத்­திற்கு இந்­தி­யா­வால் ஈடு­கொ­டுக்­க­மு­டி­ய­வில்லை. ஆட்­டத்தை பாகிஸ்­தான் வெல்­லும் எனச் சிலர் எதிர்­பார்த்­தி­ருந்­தா­லும் வெற்றி இவ்­வ­ளவு அபா­ர­மாக இருந்­தி­ருக்கும் எனப் பலர் நினைத்­தி­ருக்­க­மாட்­டார்­கள்.

"ஆட்­டங்­கள் வர வர ஒவ்­வொன்றி­லும் கவ­னம் செலுத்­து­வோம், அதுவே நமக்­குத் தன்­னம்­பிக்­கை­யைத் தரும், இப்­போட்டி முடிய இன்­னும் பல நாட்­கள் உள்­ளன," என்­றார் ஆசம்.

"நாங்­கள் திட்­ட­மிட்­ட­படி ஆட்­டத்தை ஆட­வில்லை ஆனால் பாராட்­ட­வேண்­டிய நேரத்­தில் அதைச் செய்­ய­வேண்­டும். பாகிஸ்­தான் எங்­கள் அணி­யை­விட மிகச் சிறப்­பாக ஆடி­யது," என்­றார் கோஹ்லி.

போட்டி இப்­போ­து­தான் தொடங்­கி­யி­ருக்­கிறது எனக் குறிப்­பிட்ட அவர், இது முடி­வல்ல என்­றும் அமை­தி­யாக இயங்­கு­வது முக்­கி­யம் என்­றும் வலி­யு­றுத்­தி­னார்.

டி20 கிரிக்­கெட் உல­கக் கிண்ணத்தை இந்­தியா, பாகிஸ்­தான் இரண்­டும் இது­வரை ஒரு முறை வென்­றுள்­ளன. 2007ஆம் ஆண்­டில் முதன்­மு­றை­யாக நடை­பெற்ற டி20 போட்­டியை வென்­றது இந்­தியா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!