லிஸ்பன்: தன்னுடைய வாழ்க்கைத்துணை இரட்டைக் குழந்தையை ஈன்றெடுப்பார் என்று போர்ச்சுகல் காற்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 37, தெரிவித்துள்ளார்.
ஜெர்ஜினா ரோட்ரிகேசுடன் தாம் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் அவர் தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றி உள்ளார்.
“நாங்கள் இரட்டைக் குழந்தைகளை எதிர்பார்க்கிறோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் இதயங்கள் அன்பால் நிறைந்துள்ளன,” என்று அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ரொனால்டோவுக்கு ஏற்கெனவே நான்கு குழந்தைகள் உள்ளன. அவற்றில் மூன்று குழந்தைகள் வாடகைத் தாய் மூலம் பிறந்தவை. அவற்றில் இரண்டு குழந்தைகள் இரட்டைக் குழந்தைகள்.
ரொனால்டோ-ரோட்ரிகேஸ் தம்பதிக்கு ஏற்கெனவே ஒரு குழந்தை உள்ளது. 2017 நவம்பரில் அது பிறந்தது.
ஏழு குழந்தைகள் வேண்டும் என 2017ஆம் ஆண்டு ரொனால்டோ தமது ஆசையை வெளிப்படுத்தி இருந்தார். அந்த ஆண்டில்தான் அவரது நேரடி முதல் குழந்தை பிறந்தது.