சரிவை நிறுத்திய யுனைடெட்

சரிவை நிறுத்திய யுனைடெட்

2 mins read
69fd94c5-725c-4fe8-b4d9-8b9f418e9080
ஸ்பர்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தங்கள் அணியின் இரண்டாவது கோலை கொண்டாடும் மான்செஸ்டர் யுனைடெட் விளையாட்டாளர்கள். 3-0 எனும் கோல் கணக்கில் ஆட்டத்தை வென்றது யுனைடெட்.படம்: ஏஎஃப்பி -

லண்­டன்: இங்­கி­லீஷ் பிரி­மி­யர் லீக்­கில் பெரும் கண்­ட­னத்­திற்கு உள்­ளான மான்­செஸ்­டர் யுனை­டெட் காற்­பந்து அணி மீண்டு வந்து டாட்­டன்­ஹம் ஹாட்ஸ்­பர் அணியை வென்­றது. சென்ற வாரம் லிவர்­பூலிடம் 5-0 எனும் கோல் கணக்­கில் உதை வாங்­கிய யுனை­டெட் இவ்­வாட்­டத்தை 3-0 எனும் கோல் கணக்­கில் வென்­றது. கிரிஸ்­டியானோ ரொனால்டோ, எடின்­சன் கவானி, மார்க்­கஸ் ரேஷ்­ஃபர்ட் ஆகி­யோர் கோல்­களை அடித்­த­னர்.

யுனை­டெட் நிர்­வாகி ஒலே குனா ஷொல்­சி­யா­விற்கு எந்­நே­ர­மும் வேலை போகக்­கூ­டிய நிலை உரு­வெ­டுத்­துள்­ளது எனப் பர­வ­லா­கப் பேசப்­பட்டு வரு­கிறது.

இக்­கட்­டான சூழ­லைக் கருத்­தில் கொண்டு அணி­யில் சில மாற்­றங்­க­ளைச் செய்து இப்­போ­தைக்கு நிலை­மை­யைச் சீராக்­கி­னார் ஷொல்­சியா. அணிக்கு அனு­ப­வம் சேர்க்க 36 வய­தான ரொனால்டோ, 34 வய­தான கவானி இரு­வ­ரும் தொடக்­கத்­தி­லி­ருந்து ஆடி­னர். பொது­வாக இளம் வீரர்­களை அதி­கம் விரும்­பு­ப­வர் ஷொல்­சியா.

'ஃபார்மே­ஷன்' எனப்­படும் விளை­யாட்­டா­ளர்­களை ஆட்­டத்­தில் அணி­வ­குக்­கும் முறை­யை­யும் மாற்­றி­னார். பலன்? இரண்டு மாதங்­களாக இல்­லாத நிலைத்­தன்­மையை அணி­யில் காண­மு­டிந்­தது.

பல சிறந்த முன்­னிலை விளை­யாட்­டா­ளர்­கள் இருக்­கும்­போது இதேபோல் என்­றும் ஆட­மு­டி­யா­மல் போக­லாம். ஆனால் சரிவை நிறுத்­தத் தேவை­யான உத்தி இது.

"இந்­நே­ரத்­தில் ரொனால்டோ, கவானி இரு­வ­ரின் அனு­ப­வ­மும் மிக முக்­கி­ய­மா­னது," எனக் கூறிய ஷொல்­சியா, "இது நமக்­குத் தேவை, மறைக்­க­மு­டி­யாது. அணி­யின் விளை­யாட்­டா­ளர்­கள் எல்­லோ­ருக்­கும் இது சவா­லான வார­மாக இருந்­தது. அவர்­கள் அதை மன­வு­று­தி­யு­டன் அணு­கி­னர். இத்­த­கைய சூழ­லில் அனு­ப­வம் கைகொ­டுக்­கும்," எனக் குறிப்­பிட்­டார்.

எனி­னும், இந்த வெற்றி, லிவர்­பூ­லி­டம் படு­தோல்வி அடைந்­த­தால் ஏற்­பட்ட அவ­மா­னத்­தைத் துடைக்­காது என்­ப­தை­யும் அவர் சுட்­டி­னார். யுயேஃபா சாம்­பி­யன்ஸ் லீக்­கில் நாளை இத்­தா­லி­யின் அட்­ட­லான்டா அணி­யை­யும் லீக்­கில் இவ்­வா­ர­யிறுதி­யில் நடப்பு வெற்­றி­யா­ளர் அணி­யான மான்­செஸ்­டர் சிட்­டி­யை­யும் வென்­றால்­தான் ஷொல்­சி­யா­வால் தனது வேலை­யைத் தக்­க­வைத்­துக்­கொள்ள முடி­யும் எனப் பல ஊட­கங்­கள் தெரி­வித்­துள்­ளன.

சென்ற வாரம் யுனை­டெட்டை மண்­ணைக் கவ்வ வைத்த லிவர்­பூல், பிரைட்­ட­னுக்கு எதி­ரான ஆட்­டத்­தில் இரண்டு கோல் வித்­தி­யாசத்­தில் முன்­ன­ணி­யில் இருந்­தும் வெல்­லத் தவ­றி­யது. அவ்­வாட்­டம் 2-2 எனும் கோல் கணக்­கில் சம­நி­லை­யில் முடிந்­தது.