பிரசல்ஸ்: கடந்த சில ஆண்டுகளாக உலகின் தலைசிறந்த தேசியக் காற்பந்து அணிகளில் ஒன்றாக உருவெடுத்திருக்கும் பெல்ஜியம் வரலாற்றில் முதன்முறையாக உலகக் கிண்ணத்தை வெல்லும் முயற்சியில் மறுபடியும் இறங்கவுள்ளது. அதற்கு வகைசெய்யும் விதத்தில் அடுத்த ஆண்டின் உலகக் கிண்ணப் போட்டிக்கு பெல்ஜியம் தகுதிபெற்றுள்ளது.
உலகக் கிண்ணத் தகுதிச் சுற்று ஆட்டத்தில் எஸ்டோனியாவை 3-1 எனும் கோல் கணக்கில் வென்றது பெல்ஜியம். இ பிரிவில் இவ்வணி முதலிடத்தைப் பிடிப்பதும் உறுதியாகிவிட்டது.
உலகக் கிண்ணத்தை வெல்வதற்குத் தேவைப்படக்கூடிய நட்சத்திரங்கள் அணியில் இருந்தாலும் அனைத்துலகப் போட்டிகளில் இதுவரை பெல்ஜியம் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யவில்லை. எனினும், சென்ற உலகக் கிண்ணப் போட்டியில் மூன்றாம் இடத்தில் வந்தது. போட்டியின் வரலாற்றில் பெல்ஜியம் அவ்வளவு தூரம் முன்னேறியது அதுவே முதல்முறை.