லண்டன்: கேரத் சவுத்கேட்டைத் இங்கிலாந்து தேசியக் காற்பந்து அணியின் பயிற்றுவிப்பாளராகத் தொடர்ந்து நீட்டிப்பதற்கான இருக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. தற்போதைய ஒப்பந்தத்தின்படி சவுத்கேட் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டி முடியும்வரை இங்கிலாந்தின் பயிற்றுவிப்பாளராக இருப்பார். அவரை 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள யூரோ போட்டி முடியும்வரை பதவியில் இருக்கவைக்க இங்கிலாந்து காற்பந்துச் சங்கம் முயற்சி செய்கிறது.
இங்கிலாந்தை 65 ஆண்டுகளில் முதன்முறையாக அனைத்துலகப் போட்டி ஒன்றின் இறுதியாட்டத்திற்கு முன்னேறச் செய்தார் சவுத்கேட். இவ்வாண்டு நடைபெற்ற யூரோ 2020 இறுதியாட்டத்திற்கு இங்கிலாந்து சென்றது. அதில் இத்தாலியிடம் தோல்வியுற்றாலும் இங்கிலாந்தின் விளையாட்டு பெரிதும் மேம்பட்டிருப்பதை யாராலும் மறுக்கமுடியாது. அணியில் தற்போது இருக்கும் இளம் வீரர்களின் துடிப்பும் குழு உணர்வும் இதற்குமுன் இல்லை.
இங்கிலாந்து பயிற்றுவிப்பாளராக முத்திரை பதித்துள்ள சவுத்கேட் விளையாட்டாளராகவும் சிறப்பாக ஆடியவர், பலரால் மதிக்கப்படுபவர்.