நோரிச்: சில நாட்களுக்கு முன்பு பணிநீக்கம் செய்யப்பட்ட இங்கிலீஷ் பிரிமியர் லீக் காற்பந்து அணியான ஏஸ்டன் வில்லாவின் நிர்வாகி டீன் ஸ்மித், அதே லீக்கில் உள்ள நோரிச் சிட்டிக்குச் செல்லவிருக்கிறார். இவ்விரு அணிகளும் சரியாக விளையாடாததால் தங்களின் நிர்வாகிகளை அண்மையில் பணிநீக்கம் செய்தன.
வில்லாவில் பதவிபோன ஸ்மித்துக்குக் கிட்டத்தட்ட உடனடியாக நோரிச்சில் அதே வேலை கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. பிரிமியர் லீக்கில் கடைசி இடத்தை வகிக்கும் நோரிச்சை மீட்கும் பெரிய பொறுப்பு புதிய அதன் நிர்வாகிக்கு உள்ளது.