வெற்றிப் பாதையில் தொடரும் எஃப் 1 ஜாம்பவான்

சாவ் பாலோ: எஃப் 1 கார் பந்­தய ஜாம்­ப­வா­னான லுயிஸ் ஹேமில்­ட­னின் வெற்­றிப் பய­ணம் தொடர்­கிறது. பிரே­சி­லிய எஃப் 1 கார் பந்­த­யத்­தில் மெர்ச­டிஸ் குழு­வைச் சேரந்த அவர் முத­லி­டம் பிடித்­துள்­ளார்.

இரண்­டா­வது இடத்தை மேக்ஸ் வெர்ஸ்­டப்­பன் பிடித்­தார்.

இந்­தப் பந்­த­யத்­தில் வெற்றி பெற்­ற­தன் மூலம் மாபெ­ரும் வெற்­றி­யா­ளர் பட்­டி­ய­லில் முன்­னிலை வகிக்­கும் வெர்ஸ்டப்­ப­னு­ட­னான இடை­வெ­ளி­யைக் குறைத்­துள்­ளார்.

தற்­போது ஹேமில்­ட­னை­விட வெர்ஸ்­டப்­பன் 14 புள்­ளி­கள் அதி­கம் பெற்­றுள்­ளார்.

மெர்­ச­டிஸ் குழு­வைச் சேர்ந்த வால்ட்­டேரி பொட்­டாஸ் மூன்­றா­வது இடத்­தைப் பிடித்­தார்.

போட்­டியை அவர் முத­லி­டத்­தி­லி­ருந்து தொடங்­கி­னார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று பந்­தய விதி­மு­றையை மீறி­ய­தா­கக் கூறி ஹேமில்­ட­னுக்­குச் சில பெனால்டி புள்­ளி­கள் விதிக்­கப்­பட்­டன.

இருப்­பி­னும், கவ­னம் சித­றா­மல் மிக­வும் சிறப்­பாக கார் ஓட்டி தமக்கு ஏற்­பட்ட பின்­ன­டை­வு­களை முறி­ய­டித்­தார் ஹேமில்­டன்.

ஹேமில்­டன் மிக­வும் சிறப்­

பா­கச் செயல்­பட்ட பந்­த­யங்­களில் நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற பிரே­சி­லிய எஃப் 1 பந்­த­ய­மும் ஒன்று என்று அவ­ருக்­குப்

புக­ழா­ரம் சூட்­டப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!