லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் போட்டியிடும் நார்விச் சிட்டி குழு வின் புதிய நிர்வாகியாக முன்னாள் ஆஸ்டன் வில்லா நிர்வாகியான டீன் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்பு அந்தப் பதவியை வகித்த டேனியல் ஃபார்க்கை நார்விச் சிட்டி பதவியிலிருந்து நீக்கியது.
அதேபோல ஆஸ்டன் வில்லா தொடர்ந்து ஐந்து ஆட்டங்களில் தோல்வியைத் தழுவியதால் டீன் ஸ்மித் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.