லண்டன்: உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதி பெற்றுவிட்டதை அடுத்து, புதிய ஒப்பந்தம் குறித்து இங்கிலாந்துக் காற்பந்துச் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக இங்கிலாந்துக் குழுவின் நிர்வாகி கேரத் சவுத்கேட் தெரிவித்துள்ளார்.
தமது தலைமையின்கீழ் உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெறும் இலக்கை இங்கிலாந்து அடைந்துவிட்டதால் தமது ஒப்பந்தம் நீட்டிக்கப்படுவதில் எந்த விதமான குழப்பமும் இருக்காது என்று அவர் நம்பிக்கையுடன் கூறினார்.