துபாய்: சுசுகி கிண்ண காற்
பந்துப் போட்டிக்குத் தயாராகும் வகையில் சிங்கப்பூர் குழு, துபாயில் பத்து நாட்களுக்குப் பயிற்சியில் ஈடுபட்டது.
பயிற்சியின் முடிவில் நேற்று முன்தினம் மொரோக்கோ 'ஏ' அணியுடன் மோதிய சிங்கப்பூர், 7-1 எனும் கோல் கணக்கில்
படுதோல்வி அடைந்தது.
படுதோல்வி அடைந்துள்ளபோதிலும் பதற்றம் அடையத் தேவையிவல்லை என்று சிங்கப்பூர் குழுவின் பயிற்றுவிப்பாளரான டட்சுமா யோஷிடா தெரிவித்துள்ளார்.
மொரோக்கோ 'ஏ' அணி
மிகவும் வலிமைமிக்கது என்றார் அவர். ஆனால் சுசுகி கிண்ணத்தில் சிங்கப்பூர் சந்திக்கவிருக்கும் எதிரணிகளின் தரம் முற்றிலும் வேறு என்றார் அவர். இந்தத் தோல்வியால் சிங்கப்பூர் ஆட்டக்காரர்களின் நம்பிக்கை கடுகளவும் குறையவில்லை என்றார் அவர்.