கண்ணீர்விட்டு அழுத வீரர்; கிரிக்கெட் உலகிற்குத் தலைக்குனிவு

கண்ணீர்விட்டு அழுத வீரர்; கிரிக்கெட் உலகிற்குத் தலைக்குனிவு

1 mins read
c1fe6c1b-5cec-4b5e-b5d4-6929278ce15f
-

லண்­டன்: இங்­கி­லாந்­தின் யார்க்­‌ஷி­யர் கிரிக்­கெட் அணிக்­கா­கத் தாம் விளை­யா­டி­ய­போது இன­வா­தச் சொற்­க­ளா­லும் செயல்­

க­ளா­லும் பல இன்னல்களைச் சந்தித்ததாக பாகிஸ்­தா­னைப் பூர்­வீ­க­மா­கக் கொண்ட அஸீம் ரஃபிக் (படம்) மனந்­தி­றந்­துள்­ளார்.

தம்­மைப் போன்று பல ஆசிய ஆட்­டக்­கா­ரர்­களும் இழி­வுப­டுத்­தப்­பட்­ட­தாக இந்த விவ­கா­ரம் குறித்து விசா­ரணை நடத்­தும் பிரிட்­டிஷ் நாடா­ளு­மன்­றத்­தின் மின்­னி­லக்க, கலா­சார, விளை­யாட்­டுத் துறைக் குழு­வி­டம் அவர் கண்­ணீர் மல்கக் கூறி­னார். 2008லிருந்து 2014ஆம் ஆண்டு வரை­யி­லும் அதன் பிறகு 2016லிருந்து 2018ஆம் ஆண்டு வரை­யி­லும் யார்­க்

ஷி­யர் அணிக்­காக ரஃபிக் விளை­யாடினார். தாம் 15

வய­தாக இருந்­த­போது யார்க்­‌

ஷி­யர் அணி­யைச் சேர்ந்த

வெள்­ளை­யர்­கள் மது­பா­னத்தைத் தமது வாய்க்­குள் வலுக்கட்டாயமாக ஊற்றி குடிக்க வைத்­த­தாக வேத­னை­யு­டன் நினைவுகூர்ந்­தார் ரஃபிக். இது­போன்ற மனதை உருக வைக்­கும் பல சம்­ப­வங்­களை அவர் பட்­டி­ய­லிட்­டார். இந்த விவ­கா­ரம் வெளிச்­சத்­துக்கு வந்­ததை அடுத்து, அனைத்­து­லக கிரிக்­கெட் ஆட்­டங்­களை ஏற்று நடத்­தும் உரி­மையை யார்க்­‌ஷி­யர் அணிக்­குச் சொந்­த­மான மைதா­னம் இழந்­துள்­ளது. அது­மட்­டு­மல்­லாது, பல நட்­சத்­திர வீர­ர்­களும் வில­கிவிட்­ட­னர்.

ரஃபிக்கிடம் யாக்‌ஷியர் அணி மன்னிப்பு கேட்டுக்கொண்டது.