மாயமான வீராங்கனை; கவலைக் குரல்கள் எழுந்தன

1 mins read
b63b0512-47ea-4d5e-8275-9d968c42c061
முக்கிய அரசியல்வாதிக்கு எதிராகப் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியதை அடுத்து, மாயமானார் சீனாவின் டென்னிஸ் வீராங்கனை பெங் ஹுவாய்.படம்: ராய்ட்டர்ஸ் -

லாஸ் ஏஞ்­ச­லிஸ்: சீனா­வின் முன்­னாள் துணைப் பிர­த­மர் சாங் காவ்லி தம்மை வற்­பு­றுத்தி பாலி­யல் உற­வு­கொள்ள வைத்­த­தாக அந்­நாட்­டைச் சேர்ந்த டென்­னிஸ் நட்­சத்­திர வீராங்­கனை பெங் ஷுவாய் சமூக ஊட­கத்­தில் பதி­விட்­டதை அடுத்து மாய­மா­னார். அவ­ரது இருப்­பி­டம் குறித்து எவ்­வித தக­வ­லும் இல்லை. அவர் இன்­னும் உயி­ரு­டன் இருக்­கி­றா­ரா என்ற சந்­தே­க­மும் எழுந்­துள்­ளது. பெங் ஷுவா­யின் பதிவு சமூக வலைத்­த­ளத்­தி­லி­ருந்து அகற்­றப்­பட்­டது.

இந்­நி­லை­யில், கடந்த புதன்­கி­ழ­மை­யன்று பெங்­கி­ட­மி­ருந்து வந்­த­தா­கக் கூறப்­படும் மின்­னஞ்­சல் ஒன்று WTA டென்­னிஸ் போட்­டித் தலை­வ­ருக்­கும் மற்ற அதி­கா­ரி­க­ளுக்­கும் அனுப்­பி­வைக்­கப்­பட்­டது.

முன்­வைத்த குற்­றச்­சாட்­டு­கள் உண்­மை­யா­னவை அல்ல என்­றும் தாம் நல­மாக இருப்­ப­தா­க­வும் அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இருப்­பி­னும், இதை ஏற்க பலர் மறுத்­து­விட்­ட­னர். அமெ­ரிக்க டென்­னிஸ் நட்­சத்­தி­ரம் செரினா வில்­லி­யம்ஸ் பெங் குறித்து கவலை தெரி­வித்­தார்.

"சக டென்­னிஸ் வீராங்­கனை பெங்­கிற்கு ஏற்­பட்ட நிலை பற்றி கேள்­விப்­பட்­டேன். அதிர்ச்­சி­யில் உறைந்­துள்­ளேன். மனம் சுக்­கு­நூ­றாக உடைந்­து­விட்­டது. அவர் பாது­காப்­பு­டன் இருக்க வேண்­டும் என வேண்­டிக்­கொள்­கி­றேன். அவரை விரை­வில் கண்­டு­பி­டிக்க வேண்­டும். அவ­ருக்கு நடந்த இந்­தக் கொடு­மை­யைச் சகித்­துக்­கொண்டு நாம் அமை­தி­யாக இருந்­து­வி­டக்­கூ­டாது. இந்­தச் சவால்­மிக்க நேரத்­தில் அவ­ரது குடும்­பத்­துக்கு எனது ஆத­ர­வை­யும் அன்­பை­யும் வெளிப்­ப­டுத்­து­கி­றேன்," என்று டுவிட்­ட­ரில் அவர் பதி­விட்­டார்.

தமக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்ள மின்­னஞ்­சல் உண்­மை­யில் பெங்­கி­ட­மி­ருந்­தது வந்­த­து­தானா என்ற சந்­தே­கம் இருப்­ப­தாக WTA போட்­டித் தலை­வர் ஸ்டீவ் சைமன் தெரி­வித்­தார். பெங்­கு­டன் தொடர்பு­கொள்ள முயன்­றும் முடி­ய­வில்லை என்­றார் அவர்.