டோஹா: எஃப் 1 கார் பந்தய மாபெரும் வெற்றியாளர் பட்டத்துக்காக மெர்சடிஸ் குழுவின் லுயிஸ் ஹேமில்டனுடன் மோத ஆவலுடன் காத்திருப்பதாக புள்ளிப் பட்டியலில் முன்னிலை வகிக்கும் மேக்ஸ் வெர்ஸ்டப்பன் தெரிவித்துள்ளார்.
நாளை கத்தாரில் எஃப் 1 கார் பந்தயம் நடைபெறுகிறது. அதில் வெற்றி பெற இரு வீரர்களும் முனைப்புடன் உள்ளனர்.
ஆகக் கடைசியாக நடந்து முடிந்த பிரேசிலிய எஃப் 1 பந்தயத்தில் ஹேமில்டன் வெற்றி பெற்று வெர்ஸ்டப்பனுக்கும் அவருக்கு இடையிலான புள்ளிகள் வித்தியாசத்தைக் குறைத்தார்.
பிரேசிலிய எஃப் 1 பந்தயத்தில் சீறிப் பாய்ந்த வெர்ஸ்டப்பன் ஹேமில்டனைச் சில நேரங்களில் தடுமாற வைத்தார். பந்தயத் தடத்திலிருந்து ஹேமில்டனின் கார் வெளியேறும் நிலைமை ஏற்பட்டது.
இருப்பினும், சுதாரித்துக்கொண்ட ஹேமில்டன் அந்தப் பந்தயத்தை வென்றார்.
கத்தாரில் முதல்முறையாக நடைபெறும் நாளைய பந்தயத்திலும் அதே மூர்க்கத்தனத்துடன் போட்டியிடப்போவதாக வெர்ஸ்டப்பன் கூறினார்.
கத்தார் எஃப் 1 பந்தயத்துடன் சேர்த்து இன்னும் மூன்று பந்தயங்கள் எஞ்சியிருக்கும் நிலையில், ஹேமில்டனைவிட ரெட் புல் அணியின் வெர்ஸ்டப்பன் 14 புள்ளிகள் அதிகம் பெற்றுள்ளார்.
பிரேசிலிய பந்தயத்தில் வெர்ஸ்டப்
பனின் செயல் குறித்து மெர்சடிஸ் விசாரணை கோரியுள்ளது.

