ஆன்ஃபீல்டில் அடங்கிய ஆர்சனல்

ஆன்ஃபீல்டில் அடங்கிய ஆர்சனல்

2 mins read
bd8115a9-7381-4ce4-a70d-06c04e5a7fe2
ஆர்சனலுக்கு எதிரான ஆட்டத்தில் லிவர்பூல் வீரர்கள் நால்வர் ஆளுக்கு ஒரு கோல் போட்டபோதும் அக்குழு வீரர் அலெக்சாண்டர் ஆர்னல்டின் (வலது) கோல் முயற்சி கைகூடவில்லை. படம்: ராய்ட்டர்ஸ் -

லிவர்­பூல்: தொடர்ந்து பத்து ஆட்­டங்­க­ளாக நீடித்த ஆர்­ச­னல் காற்­பந்­துக் குழு­வின் தோற்­காப் பய­ணம் லிவர்­பூல் குழு­வின் ஆன்­ஃபீல்ட் அரங்­கில் முடி­விற்கு வந்­தது.

நேற்று முன்­தி­னம் பின்­னி­ரவு நடந்த இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் ஆட்­டத்­தில் லிவர்­பூல் 4-0 என்ற கோல் கணக்­கில் ஆர்­ச­ன­லுக்­குத் தோல்­வி­யைப் பரி­ச­ளித்­தது. சொந்த அரங்­கில் ஆர்­ச­ன­லுக்கு எதி­ராக லிவர்­பூ­லுக்­குத் தொடர்ச்­சி­யா­கக் கிடைத்த ஆறா­வது வெற்றி இது.

ஆட்­டத்­தின் 39வது நிமி­டத்­தில் டிரென்ட் அலெக்­சாண்­டர் ஆர்­னல்­டி­டம் இருந்து துல்­லி­ய­மான 'ஃபிரீ கிக்' மூலம் வந்த பந்­தைத் தலை­யால் முட்டி வலைக்­குள் தள்ளி, லிவர்­பூ­லுக்கு முதல் கோலைப் பெற்­றுத் தந்­தார் சாடியோ மானே.

ஆர்­ச­னல் கோல்­காப்­பா­ளர் ஏரன் ராம்ஸ்­டேல் தமது அரு­மை­யான செயல்­பாட்­டின்­மூ­லம் லிவர்­பூல் குழு­வின் பல கோல் முயற்­சி­களை முறி­ய­டித்­தார். ஆனா­லும், 52வது நிமி­டத்­தில் அவ­ரது தடுப்பை மீறிச் சென்று கோல­டித்­தார் லிவர்­பூ­லின் போர்ச்­சு­கல் ஆட்­டக்­கா­ரர் டியோகோ ஜோட்டா.

அதன்­பின் நட்­சத்­திர வீரர் முகம்­மது சாலா 73வது நிமி­டத்­தி­லும் மாற்று வீர­ராக வந்த டக்­குமி மினா­மினோ 77வது நிமி­டத்­தி­லும் கோல் அ­டித்து, லிவர்­பூ­லின் வெற்­றியை உறு­திப்­ப­டுத்­தி­னர்.

இவ்வெற்­றியால் லிவர்­பூல் குழு 25 புள்­ளி­க­ளு­டன் பட்­டி­ய­லின் இரண்­டாம் இடத்­திற்கு முன்­னே­றி­யது (நேற்­றைய மான்­செஸ்­டர் சிட்டி - எவர்ட்­டன் ஆட்­டத்­திற்கு முந்­திய நில­வ­ரம்).

போட்­டி­யின்­போது எல்­லைக்­கோட்­ட­ருகே சொற்­போ­ரில் ஈடு­பட்­ட­தால் ஆர்­ச­னல் நிர்­வாகி மிக்­கெல் அர்ட்­டேட்­டா­வும் லிவர்­பூல் நிர்­வாகி யர்­கன் கிளோப்­பும் மஞ்­சள் அட்டை காட்டி எச்­ச­ரிக்­கப்­பட்­ட­னர்.

முன்­ன­தாக நடந்த ஆட்­டத்­தில், ஆஸ்­டன் வில்லா குழு 2-0 என்ற கோல் கணக்­கில் பிரைட்­டன் குழுவை மண்­கவ்­வச் செய்­தது. இந்த வெற்­றி­யால் தாம் நிம்­ம­தி­யாக உணர்­வ­தா­கக் குறிப்­பிட்­டார் வில்லா குழு­வின் புதிய நிர்­வா­கி­ ஸ்டீவன் ஜெரார்ட்.