கடைசிப் போட்டி சென்னையில்: டோனி நம்பிக்கை

சென்னை: தான் ஆடும் கடைசி டி20 கிரிக்­கெட் போட்டி சென்­னை­யில்­தான் நடை­பெ­றும் என்று சென்னை சூப்­பர் கிங்ஸ் அணி­யின் தலை­வர் மகேந்­திர சிங் டோனி தெரி­வித்­துள்­ளார்.

"எப்­போ­துமே எனது கிரிக்­கெட் வாழ்க்கை குறித்து திட்­ட­மிட்டு வரு­கி­றேன். எனது கடைசி அனைத்­து­லக ஆட்­டம் என் சொந்த ஊரான ராஞ்­சி­யில் நடந்­தது. அது­போல், நான் ஆடும் கடைசி டி20 போட்டி சென்­னை­யில் நடைபெறும் என நம்­பு­கி­றேன். அது அடுத்த ஆண்­டி­லும் நடக்­க­லாம் அல்­லது ஐந்­து ஆண்­டு­கள் கழித்­தும் நடக்­க­லாம்," என்று சென்­னை­யில் நடந்த ஒரு நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­ட­போது டோனி பேசி­னார்.

எங்கு சென்­றா­லும் சென்னை சூப்­பர் கிங்ஸ் அணிக்கு ரசி­கர்­கள் பேரா­த­ரவு அளித்து வரு­வ­தாக டோனி குறிப்­பிட்­டார்.

"ஒட்­டு­மொத்­தத்­தில் பார்க்­கை­யில், சென்னை அணி­யின் பலமே ரசி­கர்­கள்­தான். தமிழ்­நாடு, இந்­திய எல்லை தாண்­டி­யும் ரசி­கர்­க­ளின் ஆத­ரவு தொடர்­கிறது. துபாய், டர்­பன், மும்பை என எங்கு சென்­றா­லும் அவர்­கள் ஆத­ரவு அளிக்­கின்­றனர்.

"மோச­மான கால­கட்­டத்­தி­லும், ஈராண்­டு­கள் ஐபி­எல் தொட­ரில் பங்­கேற்க முடி­யா­மல் போன­போதும் அதி­கமாகப் பேசப்­பட்ட அணி சென்னை அணி­தான்," என்­றார் டோனி.

இவ்­வாண்டு டோனி தலை­மை­யி­லான சென்னை அணி நான்­கா­வது முறை­யாக ஐபி­எல் தொட­ரைக் கைப்­பற்­றி­யது.

ஆனா­லும், அடுத்த ஆண்டு நடக்­க­வி­ருக்­கும் ஐபி­எல் போட்­டி­களில் தான் விளை­யா­டு­வது குறித்து டோனி உறு­தி­யா­கக் கூற­வில்லை. அதே நேரத்­தில், அடுத்த பரு­வத்­தி­லும் விளை­யா­டு­வேன் என்­பதை அவர் சூச­க­மா­கக் குறிப்­பிட்­டார்.

சென்னை அணி­யைப் பொறுத்­த­மட்­டில், அடுத்த பத்து ஆண்­டு­களில் யார் யாரால் பங்­க­ளிக்க முடி­யும் என்­பதை கவ­ன­மாக ஆராய வேண்­டி­யுள்­ளது என்ற டோனி, திற­மை­யான வீரர்­க­ளைக் கொண்ட அணியை உரு­வாக்க வேண்­டி­யது அவ­சி­யம் என்­றும் அப்­போது கூறி­ இ­ருந்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!