மாயமானவர் தலைகாட்டினார்

மாயமானவர் தலைகாட்டினார்

1 mins read
131fadbc-c3a3-4eb8-9208-cd37c0aa52b0
பெய்ஜிங்கில் நேற்று நடந்த டென்னிஸ் தொடரின்போது நினைவு ஒப்பமிட்ட சீன வீராங்கனை பெங் ஷுவாய். படம்: ராய்ட்டர்ஸ் -

ஷங்­ஹாய்: சீன முன்­னாள் துணைப் பிர­த­மர்­மீது பாலி­யல் குற்­றச்­சாட்டு சுமத்­தி­ய­தைத் தொடர்ந்து மாய­மா­ன­தா­கக் கூறப்­பட்ட டென்­னிஸ் வீராங்­கனை பெங் ஷுவாய் மீண்­டும் பொது­வெ­ளி­யில் தென்­பட்ட படங்­களும் காணொ­ளி­யும் வெளி­யா­கி­யுள்­ளன. தலை­ந­கர் பெய்­ஜிங்­கில் நேற்று நடந்த ஒரு டென்­னிஸ் தொட­ரில் பெங் பங்­கேற்­றது குறித்த படங்­கள் வெளி­யா­கின. முன்­ன­தாக, நேற்று முன்­தி­னம் நண்­பர்­க­ளு­டன் உண­வ­கம் ஒன்­றில் அவர் இருந்த காணொ­ளி­யும் வெளி­யா­னது. ஆனா­லும், பெங் பாது­காப்­பாக உள்­ளார் என்­ப­தற்கு இந்­தச் சான்­று­கள் போதாது என்று உலக மக­ளிர் டென்­னிஸ் சங்­கம் தெரி­வித்­துள்­ளது.