கடைசி பந்தில் சிக்சர்! தமிழகத்தின் நாயகனாக மிளிர்ந்த ஷாருக்கான்!

புதுடெல்லி: கடைசி பந்தில் ஐந்து ஓட்டங்களை அடித்தால் வெற்றி, நான்கு அடித்தால் போட்டி சமநிலையாகி ‘சூப்பர் ஓவருக்கு’ செல்லும்.


இத்தகைய பரபரப்பான சூழலில், கால் திசையில் வந்த பந்தை உயரே தூக்கி அடித்து, ஆறு ஓட்டங்களைப் பெற்றுத் தந்தார் தமிழக வீரர் ஷாருக்கான்.


இதனையடுத்து, இறுதிப் போட்டியில் கர்நாடகாவை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடர்ந்து இரண்டாவது முறையாக சையது முஸ்டாக் அலி டி20 கிண்ணத்தைத் கைப்பற்றியது தமிழ்நாடு கிரிக்கெட் அணி.


ஒட்டுமொத்ததில், ஆக அதிகமாக தமிழக அணி மூன்று முறை அக்கிண்ணத்தை வென்றுள்ளது.


இன்று திங்கட்கிழமை நடந்த இறுதிப் போட்டியில் பூவா தலையாவில் வென்ற தமிழக அணியின் தலைவர் விஜய் சங்கர், முதலில் தமது அணி பந்துவீசும் என அறிவித்தார்.


அதனைத் தொடர்ந்து, மணீஷ் பாண்டே தலைமையிலான கர்நாடக அணி முதலில் பந்தடித்தது. சாய் கிஷோர், சஞ்சய் யாதவின் சுழற்பந்து வீச்சில் திணறிய அவ்வணி, 32 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது.


ஆனாலும், அபினவ் மனோகர் (46), பிரவீண் துபே (33) கைகொடுக்க, கர்நாடக அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 151 ஓட்டங்களை எடுத்தது.


இலக்கை விரட்டிய தமிழக அணிக்கு அதிரடித் தொடக்கம் கொடுத்தார் ஹரி நிஷாந்த். 12 பந்துகளில் 23 ஓட்டங்களை விளாசிய துரதிர்ஷ்டவசமாக ‘ரன் அவுட்’ முறையில் ஆட்டமிழந்தார்.


அதன்பின் தமிழக அணியின் ஓட்டக் குவிப்பு மந்தமானது. நிதானமாக ஆடிய விஜய் சங்கரும் (18) ஜெகதீசனும் (41) அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்க, ஆட்டம் கர்நாடகத்தின் பக்கம் திரும்பியது.


ஆனாலும், மறுமுனையில் அதிரடி ஆட்டக்காரர் ஷாருக்கான் இருந்ததால் தமிழக வீரர்கள் நம்பிக்கை இழக்கவில்லை. அந்த நம்பிக்கையை அவரும் காப்பாற்றினார்.


கடைசி ஓவரில் 16 ஓட்டங்களை எடுத்து, தமிழக அணி வெற்றியைச் சுவைத்தது. 15 பந்துகளில் ஒரு பவுண்டரி, மூன்று சிக்சருடன் 33 ஓட்டங்களை விளாசினார் ஷாருக். எதிர்பார்த்ததுபோல, அவருக்கே ஆட்ட நாயகன் விருதும் கிடைத்தது.


இவ்வாண்டு நடந்த ஐபிஎல் டி20 போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5.25 கோடி ரூபாய் கொடுத்து, ஷாருக்கை வாங்கியிருந்தது.


இந்நிலையில், சையது முஸ்டாக் அலி தொடரில் ஷாருக்கின் ஆட்டத்தைக் கண்ட அணிகள், அடுத்த மாதம் நடக்கவிருக்கும் ‘மெகா’ ஏலத்தில் பெரும் விலைகொடுத்தேனும் அவரை வாங்க அணிகள் போட்டியிடும் என்பது உறுதி!

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!