ஸிடான்: யுனைடெட்டின் நிர்வாகியாக விருப்பமில்லை

ஸிடான்: யுனைடெட்டின் நிர்வாகியாக விருப்பமில்லை

2 mins read

மான்­செஸ்­டர்: மான்­செஸ்­டர் யுனை­டெட்­டின் நிர்­வா­கி­யாக பொறுப்­பேற்க தமக்கு விருப்­ப­மில்லை என்று பிரான்­ஸின் முன்­னாள் நட்­சத்­திர ஆட்­டக்­கா­ர­ரும் ரியால் மட்­ரிட்­டின் முன்­னாள் நிர்­வா­கி

­யு­மான ஸின­டின் ஸிடான் தெரி­வித்­துள்­ள­தாக தக­வல்­கள் வெளி­யாகி உள்­ளன.

கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று வாட்­ஃபர்ட் குழு­வி­டம் 4-1 எனும் கோல் கணக்­கில் யுனை­டெட் படு­தோல்வி அடைந்­த­தும் அதன் நிர்­வா­கி­யாக இருந்த ஒலே குனா சோல்­சி­யார் பதவி நீக்­கம் செய்­யப்­பட்­டார்.

இதை­ய­டுத்து, அடுத்த நிர்­வா­கி ­யைத் தேடும் பட­லத்தை யுனை­டெட் தொடங்­கி­யுள்­ளது.

ஸிடானை யுனை­டெட் அணு­கி ­ய­தா­க­வும் அவர் நிர்­வாகி பத­வியை ஏற்க மறுத்­து­விட்­ட­தா­க­வும் கூறப்

­ப­டு­கிறது.

ஸிடா­னின் தலை­மை­யின்­கீழ் 2016ஆம் ஆண்­டி­லி­ருந்து தொடர்ந்து மூன்று சாம்­பியன்ஸ் லீக் பட்­டங்­களை ரியால் மட்­ரிட் வென்­றது.

கடந்த ஆண்டு மே மாதம் அவர் ரியா­லின் நிர்­வாகி பொறுப்­பி­லி­ருந்து வில­கி­னார்.

இதற்கு முன்பு 2018ஆம்

ஆண்­டில் அவர் பதவி வில­கி­னார். ஆனால் ஓராண்டு கழித்து அவர் ரியா­லுக்­குத் திரும்­பி­னார்.

2020ஆம் ஆண்­டில் அவர் தலை­மை­யின்­கீழ் ரியால், ஸ்பா­னிய லீக் காற்­பந்­துப் போட்­டி­யை­யும் ஸ்பா­னிய சூப்­பர் கிண்­ணத்­தை­யும் கைப்­பற்­றி­யது.

தற்­போது எந்த ஒரு குழு­வுக்கும் ஸிடான் பணி­யாற்­ற­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால் பிரெஞ்சு லீக் காற்­

பந்­துப் போட்­டி­யில் விளை­யா­டும் பாரிஸ் செயிண்ட் ஜெ­மே­னின் நிர்­வா­கி­யா­கப் பொறுப்­பேற்க ஸிடா­னுக்கு நாட்­டம் இருக்­கக்­கூ­டும் என்று நம்­பப்­ப­டு­கிறது.

அக்­கு­ழு­வின் நிர்­வா­கி­யா­கப் பொறுப்­பேற்க அவ­ருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டால் அதை அவர் உட­ன­டி­யாக ஏற்­கக்­கூ­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே யுனை­டெட்­டின் நிர்­வா­கி­யா­கப் பொறுப்­பேற்க மொரி­சியோ பொக்­கெட்­டினோ அடிக்­கடி விருப்­பம் தெரி­வித்­துள்­ளார். தற்­போது அவர் பாரிஸ் செயிண்ட் ஜெமேன் குழு­வின் நிர்­வா­கி­யா­கப் பதவி வகிக்­கி­றார்.

பொக்­கெட்­டி­னோ­வுக்­குப் பதி­லாக ஸிடானை நிர்­வா­கி­யாக நிய­மிப்­பது குறித்து பாரிஸ் செயிண்ட் ஜெ­மேன் எண்­ணம் கொண்­டி­ருக்­க­வில்லை என்­றும் தக­வல்­கள் வெளி­யாகி உள்­ளன.

இப்­படி எது­வும் உறு­தி­யா­காத நிலை­யில் புதிய நிர்­வாகி தொடர்­பான அறி­விப்­புக்­காகத் தொடர்ந்து காத்­தி­ருக்க வேண்­டிய நிலை யுனை­டெட் ரசி­கர்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்­ளது.

தற்­போது லீக் பட்­டி­ய­லில் எட்­டா­வது இடத்­தில் இருக்­கும் யுனை­டெட்டை மீண்­டும் பழை­ய­படி உச்­சத்­துக்­குக் கொண்டு செல்ல யார் வரு­வார் என்று ஆவ­லு­டன் அவர்­கள் காத்­துக்­கொண்­டி­ருக்­கின்­ற­னர்.

1990களில் யுனை­டெட்­டின் நிர்­வா­கி­யாக அலெக்ஸ் ஃபர்­கு­சன் பதவி வகித்­த­போது, இங்­கி­லிஷ்­

பி­ரி­மி­யர் லீக்­கில் அக்­கு­ழு­வுக்கு நிக­ராக வேறு எந்­தக் குழு­வும் இல்லை என்று பர­வ­லா­கப் பேசப்­பட்­டது. அக்காலகட்டத்தில் தொடர்ந்து பல கிண்ணங்களை யுனைடெட் கைப்பற்றியது.

அந்த நிலை இனி மீண்­டும் திரும்­புமா என்ற கேள்வி பலர் மனதில் எழுந்துள்ளது.