மனந்தளராமல் போராடி வென்ற ஸ்பர்ஸ்

மனந்தளராமல் போராடி வென்ற ஸ்பர்ஸ்

2 mins read
e66c2e59-bd9f-4693-af9e-9265e5af6454
வெற்றி கோலைப் போட்டுக் கொண்டாடிய ஸ்பர்ஸ் குழு. இந்த வெற்றியின் மூலம் ஸ்பர்ஸ் குழு லீக் பட்டியலில் ஏழாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. படம்: ராய்ட்டர்ஸ் -

லண்­டன்: இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் ஆட்­டத்­தில் லீட்ஸ் குழுவை 2-1 எனும் கோல் கணக்­கில் ஸ்பர்ஸ் குழு நேற்று முன்­தி­னம் வீழ்த்­தி­யது.

ஆனால் இந்த வெற்­றி­யைப் பதிவு செய்ய ஸ்பர்ஸ் குழு கடு­மை­யா­கப் போராட வேண்­டி­யி­ருந்­தது.

அடுத்த பரு­வத்­தில் பிரி­மி­யர் லீக்­கில் விளை­யாட முடி­யாத அபா­யத்தை எதிர்­நோக்­கும் லீட்ஸ், ஸ்பர்ஸ் குழு­வுக்கு எதி­ரா­கக்

கள­மி­றங்­கி­யது.

அது­மட்­டு­மல்ல, காயம், இடை­நீக்­கம் கார­ண­மாக அதன் முன்­னணி வீரர்­கள் பலர் விளை­யாட முடி­யாத சூழல் ஏற்­பட்­டது.

இருப்­பி­னும், முற்­பாதி ஆட்­டம் முடிய ஒரு நிமி­டம் மட்­டும் எஞ்­சி­இருந்­த­போது அது கோல் போட்டு முன்­னிலை வகித்­தது.

இதற்கு முன்பு கடந்த இரண்டு ஆட்­டங்­க­ளில்­ கோல் போட முடி­யா­மல் திண­றிய ஸ்பர்ஸ் குழு­வுக்கு இது மேலும் அதிர்ச்­சியை ஏற்­

ப­டுத்­தி­யது.

இருப்­பி­னும், விட்­டுக்­கொ­டுக்­கா­மல் விளை­யா­டிய ஸ்பர்ஸ், ஆட்­டத்­தின் 58வது, 69வது நிமி­டங்­களில் கோல்­க­ளைப் போட்டு ஆட்­டத்­தைக் கைப்­பற்­றி­யது.

இந்த வெற்­றி­யின் மூலம் லீக் பட்­டி­ய­லின் ஏழா­வது இடத்­துக்கு ஸ்பர்ஸ் முன்­னே­றி­யுள்­ளது.

"இந்த வெற்றி மீண்­டும் எங்­களை வெற்­றி­யின் பாதை­யில் கொண்டு செல்ல வேண்­டும். எங்­க­ளால் அடுத்­த­டுத்து வெற்­றி­களை சுவைக்க முடி­யும் என்று எனது ஆட்­டக்­கா­ரர்­க­ளி­டம் தெரி­வித்­துள்­ளேன்," என்று ஸ்பர்ஸ் குழு­வின் நிர்­வாகி அண்­டோ­னியோ கோண்ட்டே தெரி­வித்­தார்.

மற்­றோர் ஆட்­டத்­தில் எவர்ட்­டன் குழுவை 3-0 எனும் கோல் கணக்­கில் மான்­செஸ்­டர் சிட்டி ஓரங்­

கட்­டி­யது.

ஆட்­டத்­தின் 44வது நிமி­டத்­தில் ரஹீம் ஸ்டெர்­லிங்­கும் 55வது நிமி­டத்­தில் ரொட்­ரி­யும் 86வது நிமி­டத்­தில் பெர்­னாடோ சில்­வா­வும் கோல் போட்டு சிட்­டிக்கு மூன்று புள்­ளி­

க­ளைப் பெற்று தந்­த­னர். லீக்

பட்­டி­ய­லில் சிட்டி இரண்­டா­வது இடத்­தில் உள்­ளது.