டோஹா: கத்தார் எஃப் 1 கார் பந்தயத்தில் மெர்சிடிஸ் குழுவின் லுயிஸ் ஹேமில்டன் முதலிடம் பிடித்தார்.
இதற்கு முன்பு பிரேசிலில் நடைபெற்ற பந்தயத்திலும் அவர் வெற்றி பெற்றார்.
இதன் காரணமாகப் புள்ளிப் பட்டியலில் முன்னிலை வகிக்கும் ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டப்பனுக்கு அவர்
நெருக்குதல் அளித்துள்ளார்.
வெர்ஸ்டப்பனுக்கும் தமக்கும் இடையிலான புள்ளி வித்தியாசத்தை ஹேமில்டன் குறைத்துள்ளார்.
தற்போது ஹேமில்டனைவிட வெர்ஸ்டப்பன் எட்டு புள்ளிகள் அதிகம் பெற்றுள்ளார்.
இருப்பினும், நேற்று முன்
தினம் நடைபெற்ற பந்தயத்தில் வெர்ஸ்டப்பன் இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பதால் அடுத்த இரண்டு வாரங்களில் சவூதி அரேபியாவில் நடைபெறும் பந்தயத்தில் அவர் மாபெரும் வெற்றியாளர் பட்டத்தைத் தட்டிச் செல்லும் சாத்தியம் அதிகம் உள்ளது.