லியோன்: லியோனுக்கும் மார்சேவுக்கும் இடையிலான பிரெஞ்சு லீக் காற்பந்துப் போட்டி ஆட்டம், குறைந்தது இரண்டு மணி நேரத்துக்குத் தடைபட்டது. எதிர்
பாராத ஒரு சம்பவத்தால் இந்த நிலை ஏற்பட்டது.
ஆட்டத்தின் ஐந்தாவது நிமிடத்தில் மார்சேயின் அணித் தலைவர் டிமிட்ரி பயேட் கார்னர் வாய்ப்பை எடுக்கத் தயாராக இருந்தபோது ரசிகர்கள் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து பறந்து வந்த போத்தல் அவர் தலை மேல் பட்டது. அடி பலமாக இருந்ததால் நிலைகுலைந்து தரையில் விழுந்தார் பயேட்.
உடனே பயேட் உட்பட மற்ற ஆட்டக்காரர்களை அதிகாரிகள் உடனடியாக ஆட்டக்காரர்களுக்கான அறைகளுக்கு அழைத்துச் சென்றனர்.
இந்தச் சம்பவம் காரணமாக பயேட் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக மார்சே குழுவின் தலைவர் பப்லோ லொங்கோரியா தெரிவித்தார்.
இத்தகைய வன்முறைச் சம்பவங்களை வன்மையாகக்
கண்டிப்பதாக அவர் கூறினார்.
காற்பந்து உலகிற்கு ஒரு கறுப்பு தினம் என்று கூறி தமது அதிருப்தியை திரு பப்லோ வெளிப்படுத்தினார்.