கியவ்: தனது அணியில் சுமார் ஆறு விளையாட்டாளர்களுக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டபோதும் யுயேஃபா சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் உக்ரேனின் டைனமோ கியவ்வை 2-1 எனும் கோல் கணக்கில் வென்றுள்ளது ஜெர்மனியின் பயர்ன் மியூனிக். ஏற்கெனவே இரண்டாம் சுற்றுக்குத் தகுதிபெறுவது முடிவான பயர்ன், ஈ பிரிவில் இப்போது முதலிடத்தை வகிப்பதும் உறுதியாகிவிட்டது.
முற்பாதியில் மிகவும் அருமையான கோலைப் போட்டார் சென்ற ஆண்டு சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தைக் கைப்பற்றிய பயர்னின் ராபர்ட் லொவண்டொவ்ஸ்கி.
பயர்னை அசைக்கமுடியாது என்ற உணர்வு தொடர்ந்து இருந்து வருகிறது. இதனை வெல்ல இதர அணிகள் கூடுதல் நம்பிக்கையுடன் களமிறங்கவேண்டியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.