டிராஸ்போல் (ட்ரான்ஸ்னிஸ்ட்ரியா): மொல்டோவா நாட்டிலிருந்து பிரிந்துவந்த ட்ரான்ஸ்னிஸ்ட்ரியா பகுதியைச் சேர்ந்த சிறிய காற்பந்து அணியான ஷெரிஃப் டிராஸ்போலை யுயேஃபா சாம்பியன்ஸ் லீக் போட்டி ஆட்டத்தில் 3-0 எனும் கோல் கணக்கில் வென்று பழி தீர்த்துக்கொண்டுள்ளது ஸ்பெயினின் ரியால் மட்ரிட். இப்போட்டியின் தொடக்கத்தில் எதிர்பாரா விதமாக ஷெரிஃபிடம் தோல்வியடைந்தது ரியால்.
டி பிரிவில் அந்த ஆட்டத்தைத் தவிர இதர ஆட்டங்களை வென்றிருக்கும் ரியால் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறிவிட்டது. சாம்பியன்ஸ் கிண்ணத்தை ஆக அதிக முறை வென்றுள்ள இது, கடந்த மூவாண்டுகளாக சற்று களையிழந்து காணப்படுகிறது.
பல ஆண்டுகளாக நட்சத்திரப் பட்டாளத்தை வாங்கிக் குவித்துவந்த ரியால், அண்மைக் காலமாக நிதி நெருக்கடியாலும் பாதிக்கப்பட்டுள்ளது.

