ரொனால்டோவின் பழைய அணிக்கு நிம்மதி

ரொனால்டோவின் பழைய அணிக்கு நிம்மதி

1 mins read

லிஸ்­பன்: கிரிஸ்­டி­யானோ ரொனால்டோ முதன்­மு­த­லில் நிபு­ணத்­துவ காற்பந்து விளை­யாட்­டா­ள­ராக பிர­தி­நி­தித்த ஸ்போர்­டிங் சிபி அணி, 13-ஆண்டுகளுக்குப் பிறகு மீண்­டும் யுயேஃபா சாம்­பி­யன்ஸ் லீக் போட்­டி­யின் இரண்­டாம் சுற்­றுக்கு முன்­னே­றி­யுள்­ளது. சி பிரி­வில் ஜெர்­ம­னி­யின் பொரு­சியா டோர்ட்­மண்டை 3-1 எனும் கோல் கணக்­கில் வென்று பட்­டி­யலில் இரண்­டாம் இடத்­தில் முடிப்­பதை உறு­தி­செய்­து­கொண்­டது போர்ச்­சு­க­லின் ஸ்போர்­டிங். டோர்ட்­மண்ட், அவ்­வ­ளவு எளி­தில் வெல்­லக்­கூ­டிய அணி அல்ல.

டி பிரி­வில் ஒன்­பது ஆண்டு களுக்­குப் பிறகு இரண்­டாம் சுற்றுக்கு முன்­னே­றி­யது, 11 ஆண்டுகளுக்கு முன் கிண்ணத்தை வென்ற இத்­தா­லி­யின் இன்­டர் மிலான். கடந்த சில ஆண்டுகளாகச் சோபிக்காத இன்டர் இப்போது மீண்டுவருகிறது.