சுவர்ப்பந்து: இஸ்ரேல் வீரர்களை அனுமதிக்காத மலேசியா

கோலா­லம்­பூர்: தனது நாட்­டில் அடுத்த மாதம் நடை­பெ­ற­வுள்ள முக்­கி­ய­மான சுவர்ப்­பந்­துப் போட்டி­யில் பங்­கேற்க மலே­சியா, இஸ்­ரேலிய விளை­யாட்­டா­ளர்­க­ளுக்கு விசா வழங்க மறுப்­ப­தாக உலக சுவர்ப்­பந்­துச் சம்­மே­ள­னம் தெரி­வித்­துள்­ளது. சம­யம் சார்ந்த கார­ணங்­க­ளுக்­காக மலே­சியா இவ்­வாறு செய்­வ­தா­கக் கரு­தப்­படுகிறது. சுவர்ப்­பந்­துப் போட்டி அடுத்த மாதம் ஏழாம் தேதி­யிலிருந்து 12ஆம் தேதி­வரை நடை­பெ­றும்.

மலே­சியா ஏற்­கெ­னவே இஸ்­ரே­லிய விளை­யாட்­டா­ளர்­க­ளைத் தனது நாட்­டிற்­குள் அனு­ம­திக்க மறுத்திருக்கிறது. 2019ஆம் ஆண்­டில் சிறப்­புத் தேவை­யு­டை­யோ­ருக்­கான நீச்­சல் போட்­டி­யில் இஸ்­ரேலிய வீரர்­களை அனு­ம­திக்­கப்­போ­வ­தில்லை என்று மலே­சியா மிரட்­டி­யது. அதைத் தொடர்ந்து அப்­போட்­டியை ஏற்று நடத்­தும் பொறுப்பு அத­னி­ட­மி­ருந்து பறிக்­கப்­பட்­டது. 2015ஆம் ஆண்­டில் இஸ்­ரே­லின் 'விண்ட்­சர்­ஃபிங்' எனப்­படும் அலை­யா­டல் வீரர்­களுக்கு மலே­சியா விசா வழங்க மறுத்­தது. அத­னால் லங்­கா­வி­யில் நடை­பெற்ற போட்­டி­யிலி­ருந்து இஸ்­ரே­லிய வீரர்­கள் விலக நேரிட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!