இடைக்கால நிர்வாகியாக ரானிக் நியமிக்கப்படலாம்

மான்­செஸ்­டர்: மான்­செஸ்­டர் யுனை­டெட் குழு­வின் இடைக்­கால நிர்­வா­கி­யாக ரால்ஃப் ரானிக் நிய­மிக்­கப்­ப­டக்­கூ­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஜெர்­ம­னி­யைச் சேர்ந்த 63 வயது ரானிக் அந்­நாட்­டில் ஆர்பி லெய்ப்­ஸிக் குழு­வின் எழுச்­சிக்­குக் கார­ண­மா­ன­வர்.

அது­மட்­டு­மல்­லாது, நவீன ஜெர்­மன் காற்­பந்­தின் முன்­னோ­டி­யா­க­வும் அவர் கரு­தப்­ப­டு­கி­றார்.

அண்­மை­யில் யுனை­டெட்­டின் நிர்­வா­கிப் பத­வி­யி­லி­ருந்து ஒலே கு­னார் சோல்­சி­யா நீக்­கப்­பட்­டார்.

வார்ட்­ஃபர்ட் குழு­வுக்கு எதி­ரான ஆட்­டத்­தில் யுனை­டெட் 4-1 எனும் கோல் கணக்­கில் படு­தோல்வி அடைந்­ததை அடுத்து சோல்­சி­யா பதவி நீக்­கம் செய்­யப்­பட்­டார்.

இந்­நி­லை­யில், ஜெர்­மன் காற்­பந்து உல­கில் ஆர்பி லெய்ப்­ஸிக், ரெட் புல் சால்ஸ்­பர்க் ஆகிய குழுக்­கள் புகழ்­பெற கார­ண­மான ரானிக்கை ஒப்­பந்­தம் செய்ய யுனை­டெட் விரும்­பு­வ­தா­கத் தக­வல்­கள் வெளி­யாகி உள்­ளன.

பாரிஸ் செயிண்ட் ஜெமேன் குழு­வின் நிர்­வா­கி­யாக இருக்­கும் மொரி­சியோ பொக்­கெட்­டினோ அல்­லது ஆயக்ஸ் ஆம்ஸ்­டர்­டாம் குழு­வின் நிர்­வா­கி­யா­ன எரிக் டென் ஹேக் யுனை­டெட்­டின் அடுத்த முழு­நேர நிர்­வா­கி­யாக நிய­மிக்­கப்­ப­டக்­கூ­டும் என்று பேசப்­ப­டு­கிறது.

இருப்­பி­னும், உட­ன­டி­யாக யுனை­டெட்டை மீண்­டும் வெற்­றி­யின் பாதைக்­குக் கொண்டு செல்ல இடைக்­கால நிர்­வாகி தேவைப்­

ப­டு­கிறது.

எனவே ரானிக்­கிற்கு அந்­தப் பொறுப்பு வழங்­கப்­ப­டக்­கூ­டும்.

யாரும் அறிந்­தி­டாத ஹோஃபன்ஹைம் குழுவை ஜெர்­மன் காற்­பந்து லீக் வரை கொண்டு சென்ற பெருமை ரானிக்­கைச் சேரும்.

தீவி­ர­மான, மிக வேக­மான விளை­யாட்டு அணு­கு­மு­றையை கையாள்­ப­வர் ரானிக்.

யுனை­டெட்­டின் இடைக்­கால நிர்­வா­கி­யாக ரானிக் நிய­மிக்­கப்­பட்­டால் இப்­ப­ரு­வம் முடி­யும் வரை அவர் அதில் நீடிப்­பார் என்று கூறப்­ப­டு­கிறது.

புதிய நிர்­வாகி தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­தும் மான்செஸ்டர் யுனை­டெட் குழு­வின் ஆலோ­ச­க­ராக அவர் பொறுப்­பேற்­கக்­கூ­டும் என்று நம்­பப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!