லண்டன்: யூரோப்பா லீக்கின் முதல் சுற்றிலிருந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும் சாத்தியத்தை லெஸ்டர் சிட்டி வலுப்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் போலந்தின் லீகியா வார்சாவை அது 3-1 எனும் கோல் கணக்கில் தோற்கடித்தது.
இதன்மூலம் 'சி' பிரிவில் கடைசி இடத்தில் இருந்த லெஸ்டர் தற்போது முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஐந்து ஆட்டங்கள் விளையாடிய நிலையில் எட்டு புள்ளிகளை லெஸ்டர் சிட்டி பெற்றுள்ளது. ஸ்பார்டாக் மாஸ்கோ, நெப்போலி ஆகிய குழுக்களைவிட அது ஒரு புள்ளி அதிகம் பெற்றுள்ளது. லீகியா வார்சாவைவிட லெஸ்டர் இரண்டு புள்ளிகளைப் பெற்றுள்ளது. அடுத்த சுற்றுக்கு முன்னேற இந்த நான்கு குழுக்களிடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
கடந்த புதன்கிழமையன்று ஸ்பார்டாக் மாஸ்கோவை நெப்போலி 2-1 எனும் கோல் கணக்கில் தோற்கடித்தது.
லெஸ்டரின் கோலைப் போட்ட வில்ஃபிரட் டிடி (நடுவில்).
படம்: இபிஏ