மரடோனா நினைவு தினம் அனுசரித்த ரசிகர்கள்

மரடோனா நினைவு தினம் அனுசரித்த ரசிகர்கள்

1 mins read
05ab732f-7b7c-46ee-90bc-a2801640b77e
இத்தாலியின் நேப்பல்ஸ் நகரில் ரசிகர்கள் பலர் மறைந்த மரடோனாவுக்கு அஞ்சலி செலுத்தினர். படம்: ஏஎஃப்பி -

பியூ­னஸ் அய்ரஸ்: காற்­பந்து உல­கின் ஜாம்­ப­வா­னும் அர்­ஜெண்­டி­னா­வின் காற்­பந்து சகாப்­த­மு­மான டியேகோ மர­டோ­னா­வின் ஓராண்டு நினைவு தினத்தை உல­கெங்­கும் உள்ள அவ­ரது ரசி­கர்­கள் நேற்று முன்­தி­னம் அனு­ச­ரித்­த­னர்.

அர்­ஜெண்­டி­னா­வில் நேற்று முன்­தி­னம் காற்­பந்து ஆட்­டங்­கள் தொடங்­கு­வ­தற்கு முன்பு மர­டோ­னா­வுக்கு மரி­யாதை செலுத்­தும் வகை­யில் ஒரு நிமிட மௌன அஞ்­சலி செலுத்­தப்­பட்­டது.

அது­மட்­டு­மல்­லாது, மர­டோ­னா­வின் சீருடை எண் 10. அதற்கு ஏற்ப அந்த எண்­ணின் வடி­வில் ஆட்­டக்­கா­ரர்­கள் வரி­சை­யாக நின்­ற­னர். அர்­ஜெண்­டி­னா­வி­லும் இத்­தா­லி­யின் நேப்­பல்ஸ் நக­ரி­லும் ஆயி­ரக்­க­ணக்­கான ரசி­கர்­கள் அவ­ருக்கு அஞ்­சலி செலுத்­தி­னர். நேப்­பல்ஸ் நக­ரின் நெப்­போலி குழு­வுக்­காக மர­டோனா விளை­யா­டி­னார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.