வெளியேறிய சிங்கப்பூர் வீரர்கள்

உலக மேசைப்பந்து போட்டியில் சிங்கப்பூரின் ஃபெங் தியேன்வெய், கொயின் பாங் ஆகியோரின் பயணம் முடிவுக்கு வந்தது.

தென்கொரியாவின் சு ஹியோ வோனிடம் 4-3 எனும் செட் கணக்கில் ஃபெங் தியேன்வெய் தோற்றார்.

காலிறுதிக்கு முந்திய சுற்றுக்குத் முதல்முறையாக ஃபெங் தியேன்வெய் தகுதி பெறவில்லை.

“நான் சிறப்பாக விளையாடினேன். வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தது. முன்னிலை வகித்தும் வெற்றி பெறமுடியாமல் போனது வேதனை அளிக்கிறது.

“அடுத்த போட்டியில் கூடுதல் மனபலத்துடன் களமிறங்கி மீண்டும் வெற்றிகளைப் பதிவு செய்ய விரும்புகிறேன்,” என்று 35 வயது ஃபெங் தியேன்வெய் தெரிவித்தார்.

19 வயது கொயின் பாங் 4-0 எனும் செட் கணக்கில் ஜெர்மனியின் டிமோ பொலிடம் தோல்வி அடைந்தார்.

“டிமோ பொல் மிகவும் அனுபவம்வாய்ந்த ஆட்டக்காரர். ஆட்டத்தை அவர் தமது கட்டுக்குள் வைத்துக்கொண்டார். என்னால் வழக்கம்போல் செயல்பட முடியாமல் போனது.

“இந்த ஆட்டத்தை ஒரு நல்ல அனுபவமாக எடுத்துக்கொண்டு, அதிலிருந்து கற்றுக்கொண்டவற்றை அடுத்த ஆட்டங்களில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளேன்,” என்றார் கொயின் பாங்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!