நியூசிலாந்து விக்கெட் இழப்பின்றி 129 ஓட்டங்கள்

நியூசிலாந்து விக்கெட் இழப்பின்றி 129 ஓட்டங்கள்

1 mins read

கான்பூர்: இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது.

ஷ்ரேயாஸ் ஐயர் அறிமுக போட்டியிலேயே சதம் அடிக்க ஷுப்மான் கில் (52) மற்றும் ஜடேஜா (50) அரைசதம் அடிக்க இந்தியா 111.1 ஓவர்களில் 345 ஓட்டங்கள் குவித்தது. நியூசிலாந்து அணியில் டிம் சவுத்தி 69 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜேமிசன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதை அடுத்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சைத் தொடங்கியது. டாம் லேதம், வில் யங்க் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கினர். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் இவர்களை வீழ்த்துதற்காக மேற்கொண்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டன

இதனால் இருவரும் அரைசதம் அடித்தனர். ஐந்து பந்துவீச்சாளர்களையும் செய்வதறியாது தவிக்கவிட்ட நியூசிலாந்து தொடக்க ஜோடி, விக்கெட் இழக்காமல் 57 ஓவர்களில் 129 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

டாம் லேதம் 165 பந்துகளில் 50 ஓட்டங்களும் வில் யங் 180 பந்துகளில் 75 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.