அசத்தும் அக்சர் பட்டேல்

கான்­பூர்: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏழு இன்­னிங்­ஸ்களில் ஐந்து முறை ஐந்து விக்­கெட்­டு­களை வீழ்த்தியுள்ளார் இந்­தி­யா­வின் அக்­சர் பட்­டேல். நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஐந்து விக்­கெட்­டு­களைக் கைப்பற்றினார் சுழற்பந்து வீச்சாளரான அக்­சர்.

தனது முதல் நான்கு டெஸ்ட் போட்டிகளில் ஆக அதிக முறை ஐந்து விக்­கெட் வீழ்த்திய வீரர்கள் பட்­டி­யலில் இரண்­டாம் இடத்தை வகிக்­கிறார் அக்­சர். இவரின் சாகசங்களால் டுவிட்டரில் ரசிகர்கள் ஆனந்த மழையில் திளைத்தனர்.

மூன்­றாம் நாளில் நியூ­சிலாந்து அணி தனது முதல் இன்­னிங்­சில் 296 ஓட்­டங்­களுக்கு ஆட்­ட­மி­ழந்­தது. முன்­னதாக, இந்­தியா தனது முதல் இன்­னிங்­சில் 345 ஓட்­டங்­களை எடுத்­தி­ருந்­தது.

மூன்­றாம் நாள் ஆட்ட நேர முடி­வில் இந்­தியா தனது இரண்­டா­வது இன்­னிங்­சில் ஒரு விக்­கெட் இழப்­பிற்கு 14 ஓட்­டங்­களை எடுத்­தது. 63 ஓட்­டங்­கள் முன்­னி­லை­யில் உள்­ளது இந்­தியா.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!