செல்சியை நெருங்கத் துடிக்கும் சிட்டி

மான்­செஸ்­டர்: இங்­கி­லீஷ் பிரி­மி­யர் லீக் பட்­டி­ய­லில் தனக்­கும் செல்­சிக்­கும் இருக்­கும் புள்­ளி­கள் வித்­தி­யா­சத்­தைக் குறைக்­கத் துடிக்­கிறது இரண்­டாம் இடத்தை வகிக்­கும் நடப்பு வெற்­றி­யா­ளரான மான்­செஸ்­டர் சிட்டி காற்­பந்து அணி. செல்சி ,யுனை­டெட்டை வெல்­லத் தவறி சிட்டி, வெஸ்ட் ஹேம் யுனை­டெட்­டிற்கு எதி­ரான தனது ஆட்­டத்தை வென்­றால் வித்­தி­யா­சம் குறை­யும். தற்­போது செல்சி மூன்று புள்­ளி­கள் வித்­தி­யா­சத்­தில் முன்­ன­ணி­யில் உள்­ளது.

எனி­னும், நான்­காம் இடத்­தில் உள்ள வெஸ்ட் ஹேமை வெல்­வது சவா­லா­னது. அபா­ர­மாக விளை­யா­டி­வ­ரும் லிவர்­பூலை வென்ற அணி வெஸ்ட் ஹேம்.

ஆனால் சென்ற வாரம் யுயேஃபா சாம்­பி­யன்ஸ் லீக் ஆட்­டத்­தில் லய­னல் மெஸ்ஸி, நேமார், கிலி­யோன் இம்­பாப்பே போன்ற நட்­சத்­தி­ரங்­க­ளைக் கொண்ட பிஎஸ்­ஜி­யையே வென்­றது சிட்டி. அதே உற்­சா­கத்­து­டன் இவ்­வாட்­டத்­தில் சிட்டி கள­மி­றங்­கி­னால் இத­னைத் தடுப்­பது சிர­மம்.

சுமா­ராக விளை­யா­டிக்­கொண்­டி­ருக்­கும் வேளை­யி­லும் அதி­ர­வைக்­கும் கோல்­களைப் போடக்கூடிய வீரர்­கள் சிட்­டி­யில் உள்­ள­னர். எதிர் அணி எந்­நே­ர­மும் மெத்­த­ன­மாக இருந்­து­விட முடி­யாது.

எனி­னும், இவ்­வாட்­டம் சில தரப்­பி­னர் எதிர்­பார்க்­கும் அளவு சிட்­டிக்குச் சாதகமாக இல்­லா­மல் போகவும் வாய்ப்புள்ளது. கார­ணம், வெஸ்ட் ஹேமை அதன் நிர்­வாகி டேவிட் மோயெஸ் இது­வரை நான்­காம் இடத்­தில் வைத்­ததே எதிர்பார்ப்புகளை மீறிய செயல்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!