நம்பிக்கை இழக்காத நியூகாசல் நிர்வாகி

லண்­டன்: பிரி­மி­யர் லீக் தர­வ­ரி­சை­யில் அடி மட்­டத்­தில் இருக்­கும் நியூ­கா­சல் குழு­வுக்கு பிரச்­சி­னை­கள் ஓய்ந்­த­பா­டில்லை. நேற்று முன்­தி­னம் ஆர்­ச­னல் அணி­யு­டன் மோதிய நியூ­கா­சல் 0-2 என்ற கோல் கணக்­கில் தோல்­வி­யைத் தழு­வி­யது.

ஆர்­ச­னல் அணி­யின் சார்­பாக புக்­காயோ சாக்கா, கேப்­பி­ரி­யல் மார்­டி­னேலி இரு­வ­ரும் போட்ட கோல்­களே அதற்கு வெற்றி தேடித் தர போது­மா­ன­தாக விளங்­கி­ன.

நியூ­கா­ச­லுக்கு புதிய நிர்­வா­கி­யாக பொறுப்­பேற்­றுக் கொண்­டுள்ள எடி ஹாவ் அண்­மை­யில் கொவிட்-19 கிரு­மி­யால் பாதிக்­கப்ட்ட நிலை­யில் சென்ற வாரம் பிரண்ட்­ஃபர்ட் குழு­வு­டன் மோதி 3-3 என சம­நிலை கண்­ட­போது அவ­ரால் திட­லுக்கு வர­மு­டி­யாக நிலை.

நேற்று முன்­தி­னம் அந்­தக் குறை நீங்­கிட அவ­ரும் ஆர்­ச­ன­லு­ட­னான ஆட்­டத்­தில் திட­லுக்கு நேர­டி­யாக வந்து பொறுப்­பேற்­றுக் கொண்­டார். ஆனால், அவ­ருக்கு மிஞ்­சி­யது ஏமாற்­றமே. லிவர்­பூ­லி­டம் சென்ற வாரம் தோல்வி கண்ட ஆர்­ச­னல் முதல் பாதி­யில் கோல் போட முடி­யா­மல் திண­றி­யது.

எனி­னும், கவ­னம் சித­றா­மல் பொறு­மை­யு­டன் விளை­யா­டிய ஆர்­ச­னல் 56வது நிமி­டத்­தில் சாக்கா கோல் போட்டு நிம்­மதி அளித்­தார். பின்­னர் மார்­டி­னேலி இரண்­டா­வது கோல் போட நியூ­கா­ச­லால் எழ முடி­ய­வில்லை.

முதல் பாதி ஆட்­டத்­தில் நியூ­கா­ச­லின் ஜோன்ஜோ ஷெல்வி ஆர்­ச­னல் கோல் வலையை நோக்கி உதைத்த பந்து கோல் கம்­பத்தை தொட்­டுச் சென்­றது. பின்­னர், ஆர்­ச­னல் கோல் போட்­ட­தும் நியூ­கா­ச­லின் முனைப்பு குறைந்­தது.

இது குறித்து கருத்­து­ரைத்த ஹாவ், “நான் நம்பிகை இழக்கா தவன். இந்த இரண்டு ஆட்­டங்­களில் கண்­டதை வைத்­து, நியூ­கா­சல் குழு­வால் பிரி­மி­யர் லீக் போட்­டி­களில் தாக்­குப் பிடிக்க முடி­யும் என்­று சொல்ல முடியும்,” என சளைக்காமல் கூறி­னார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!