ஆஸ்டன் வில்லா: இருபத்து மூன்று ஆண்டுகள் காணாத சாதனை

லண்­டன்: பிரி­மி­யர் லீக் சரித்­தி­ரத்­தில் ஆஸ்­டன் வில்லா குழு­வுக்கு பொறுப்­பேற்­றுக் கொண்ட எந்த நிர்­வா­கி­யும் தனது முதல் இரண்டு ஆட்­டங்­களில் தொடர் வெற்றி பெற்­ற­தில்லை.

ஆனால், அந்­தப் பெரு­மையை நேற்று முன்­

தி­னம் ஆஸ்­டன் வில்­லா­வுக்கு அண்­மை­யில் புதிய நிர்­வா­கி­யாக பொறுப்­பேற்­றுக்கொண்ட ஸ்டீ­வன் ஜெரார்ட் தன­தாக்­கிக் கொண்­டுள்­ளார்.

கிறிஸ்­டல் பேலஸ் அணி­யு­டன் நேற்று முன்­தி­னம் மோதிய ஆஸ்­டன் வில்லா, அதை 2-1 என வெற்றி கொண்­டது. கிறிஸ்­டல் பேலஸ் நிர்­வா­கி­யும் முன்­னைய ஆர்­ச­னல் மத்­திய திடல் ஆட்­டக்­கா­ர­ருமான இருந்த பேட்­ரிக் விய­ரா­வுக்­கு இது முதல் தோல்வி என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

மேக் டார்­கெட், ஜான் மெக்­கு­வின் ஆகிய இரு­வ­ரும் வில்லா சார்­பாக கோல்­கள் போட, ஆட்­டத்­தின் கூடு­தல் நேரத்­தில் பேல­ஸுக்கு மார்க் குவெகி ஆறு­த­லாக ஒரு கோல் போட்­டார்.

கிறிஸ்­டல் பேல­ஸு­ட­னான ஆட்­டம் குறித்­துப் பேசிய ஜெரார்ட், “இந்த ெவற்­றி­யின் மூலம் நாம் ஏதோ பெரி­தாக சாதித்துவிட்­டோம் என்று எண்ணி­வி­டக்­கூ­டாது. நமது ஆட்­டக்­கா­ரர்­கள் அற்­பு­த­மாக சில நேரங்­களில் விளை­யா­டி­னர். சில சம­யங்­களில் நாம் நெருக்­கு­தலை சமா­ளித்து தற்­காத்து விளை­யாட வேண்­டி­யி­ருந்­தது.

எனி­னும், இறு­தி­யில் வெற்றி பெற்­று­விட்­டோம்,” என்று மகிழ்ச்சி பொங்­கக் கூறி­னார். பேலஸ் அணி­யின் தற்­காப்பு அரண் சில சந்­தர்ப்­பங்­களில் விளை­யாட இய­லா­மல் இருப்­பதை தனக்கு சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திக்கொண்ட வில்லா, முதல் கோலுக்கு கார்­னர் வாய்ப்பை நன்கு நம்பியது வீண்போகவில்லை. பந்தை சக வீரர் டார்­கெட்டை நோக்கி ஆஷ்லி யங் உதைக்க அவ­ரும் அதை லாவ­க­மாக கோல் வலைக்­குள் போட்­டார்.

அத்­து­டன், மத்­திய திட­லில் நக்­காம்பா, ஜேக்­கப் ரேம்ஸி இரு­வ­ரும் பேல­ஸின் கோனர் கேல­ஹர் என்­ப­வரை தங்­கள் கட்­டுப்­பாட்­டுக்­குள் வைத்­தி­ருந்­த­னர்.

“பேலஸ் அணி­யின் தற்­காப்பு அரண் கார்­னர், ஃபிரீகிக் போன்ற வற்றை சமா­ளிக்க சிரமப்படும் என்பதை அறிவோம்,” என்றார் மார்க் டார்கெட்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!