மீண்டும் மெஸ்ஸிக்கே விருது

மீண்டும் மெஸ்ஸிக்கே விருது

2 mins read
cdd8ee0e-bcec-48a2-acba-ea5dd76b9d88
தம் மனைவி, பிள்ளைகளுடன் நிற்கும் லயனல் மெஸ்ஸி. 'பலோன் டு' வோர்' எனப்படும் உலகின் ஆகச் சிறந்த காற்பந்து விளையாட்டாளர் விருதை ஏழாவது முறையாக வென்றுள்ளார் பிஎஸ்ஜி வீரரும் அர்ஜென்டினா நட்சத்திரமுமான மெஸ்ஸி. படம்: ராய்ட்டர்ஸ் -

பாரிஸ்: வர­லாறு காணாத வகை­யில் ஏழா­வது முறை­யாக 'பலோன் டு' வோர்' எனப்­படும் உல­கின் தலை­சி­றந்த காற்­பந்து வீர­ரைக் கௌரவிக்கும் விருதை வென்­றுள்­ளார் பிரான்­சின் பிஎஸ்ஜி அணி­யைச் சேர்ந்த லய­னல் மெஸ்ஸி. நீண்­ட­கா­ல­மாக ஸ்பெ­யி­னின் பார்­சி­லோனா அணிக்கு விளை­யா­டிய 34 வயது மெஸ்ஸி, அர்­ஜென்­டினா தேசிய அணி­யின் தலை­வ­ரும் ஆவார். இவரின் தலைமையில் லத்­தீன் அமெ­ரிக்க தேசிய அணி­கள் பங்­கேற்­கும் கோப்பா அமெ­ரிக்கா போட்டியை அர்­ஜென்­டினா சில மாதங்­க­ளுக்கு முன் வென்­றது.

"மறு­ப­டி­யும் இத­னைச் செய்­துள்­ளது (பலோன் டு' வோர் விருதை வென்­றது) அற்புதமான ஒன்று. ஈராண்­டு­க­ளுக்கு முன்பு வென்­றதே கடைசி முறையாக இருக்கும் என்று நான் நினைத்­தேன்," என்­றார் மெஸ்ஸி. "கோப்பா அமெ­ரிக்கா கிண்­ணத்தை அர்­ஜென்­டினா வென்­ற­தால் இது எனது நினை­வில் நிற்­கும் ஆண்டாக அமைந்துள்ளது. மராக்­கானா விளை­யாட்­ட­ரங்­கில் கோப்பா கிண்­ணத்தை வென்­றது மறக்­க­மு­டி­யாத ஒரு நிகழ்­வாக அமைந்­த­து­டன் அர்­ஜென்­டினா மக்­க­ளு­டன் கொண்­டாட முடிந்­தது மகிழ்ச்­சி­யாக இருந்­தது," என்­றும் இவர் குறிப்­பிட்­டார்.

அர்­ஜென்­டி­னா­வுக்­குக் கிண்­ணம் வென்று தர­வில்லை என்று மெஸ்ஸி மீதி­ருந்த சில தரப்­பி­ன­ரின் குற்றச்­சாட்­டை­யும் கோப்பா வெற்றி அகற்­றி­யது. பார்­சி­லோனா அணிக்கு விளை­யா­டி­ய­போது சில பரு­வங்­களில் சுமார் 60 கோல்­க­ளைப் போட்டு காற்­பந்து உலகை ஆச்­சரி­யத்­தில் ஆழ்த்­தி­ய­வர் மெஸ்ஸி. இவ­ருக்கு அடுத்­த­ப­டி­யாக 'பலோன் டு' வோர்' விருதை ஆக அதிக முறை வென்­றுள்­ளார் இங்­கி­லாந்­தின் மான்­செஸ்­டர் யுனை­டெட்­டிற்கு ஆடும் போர்ச்­சு­கீ­சிய நட்­சத்­தி­ரம் கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ.

ஜெர்­ம­னி­யின் பயர்ன் மியூ­னிக் அணிக்கு ஆடும் ராபர்ட் லெவண்­டொவ்ஸ்கி, சென்ற ஆண்­டுக்­கான விருதை வெல்­வார் எனப் பர­வ­லாக எதிர்­பார்க்­கப்­பட்­டது.

ஆனால் கொவிட்-19 கிரு­மிப் பர­வல் சூழல் காரணமாக விரு­து­ நிகழ்ச்சி ரத்து­செய்­யப்பட்டது. அதிக காற்பந்து ஆட்டங்கள் இடம்பெறாததால் விருதுகள் வழங்கப்படவில்லை. இவ்­வாண்­டும் லெவண்டொவ்ஸ்கி விரு­துக்கு முன்­மொ­ழி­யப்­பட்­டார். "அவ­ரு­டன் போட்­டி­யி­டு­வது எனக்­குக் கிடைத்த பெருமை என்று ராபர்ட்­டி­டம் லெவண்­டொவ்­ஸ்­கி­யி­டம் கூற நினைத்­தேன்," என்று சொன்ன மெஸ்ஸி, "சென்ற ஆண்டு விருதை வெல்ல அவ­ருக்கு எல்லாத் தகு­தி­களும் இருந்­தன," எனப் பாராட்­டி­னார்.

தற்போது பிஎஸ்ஜியில் சற்று சிரமப்படும் மெஸ்ஸிக்கு இவ்விருது ஊக்கமாக அமையலாம்.