பாரிஸ்: மெஸ்ஸியிடமிருந்து 'பலோன் டு' வோர்' விருதைத் தட்டிச் செல்லும் விளிம்புக்கு வந்துள்ளார் ெ்ஜர்மனியின் பயர்ன் மியூனிக் அணியின் போலந்து நட்சத்திரம் ராபர்ட் லெவண்டொவ்ஸ்கி. போலந்து அணித் தலைவருமான இவர், மெஸ்ஸிக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வந்தார். மேலும், ஆண்டின் ஆகச் சிறந்த தாக்குதல் ஆட்டக்காரர் என்ற புதிய விருதையும் தட்டிச் சென்றார்.
'பலோன் டு' வோர்' விருதுகளில் இவ்வாண்டு உருவாக்கப்பட்டுள்ள புதிய பிரிவு இது. விருது நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு இப்பிரிவு குறித்து அறிவிக்கப்பட்டது.
இவ்வாண்டு மட்டும் அனைத்து போட்டிகளிலும் பயர்னுக்கு 53 கோல்களைப் போட்டுள்ள 33 வயது லெவண்டொவ்ஸ்கி, சென்ற ஆண்டு கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்ஸி இருவரையும் பின்னுக்குத் தள்ளி அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் வழங்கிவரும் ஆகச் சிறந்த ஆண் காற்பந்து வீரர் விருதைத் தட்டிச் சென்றார். இவ்விருதுகள் லெவண்டொவ்ஸ்கி குவித்துள்ளவற்றில் ஒருசில மட்டுமே. மேலும், சென்ற பருவத்தில் ஜெர்மனியின் புண்டஸ்லீகா லீக்கில் பயர்னுக்கு 29 ஆட்டங்களில் 41 கோல்களைப் போட்டு புதிய சாதனை படைத்தார். இதன் மூலம் பயர்னின் மறைந்த முன்னாள் நட்சத்திரம் கெர்ட் முல்லர் படைத்திருந்த சாதனையை முறியடித்தார் ெலவண்டொவ்ஸ்கி.
மெஸ்ஸி, லெவண்டொவ்ஸ்கி ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாம் இடத்தைப் பிடித்தார் இங்கிலாந்தின் செல்சி அணியைச் சேர்ந்த இத்தாலி வீரர் ஜோர்ஜின்யோ. ஆண்டின் ஆகச் சிறந்த அணிக்கான விருதைக் கைப்பற்றியது செல்சி. யூரோ 2020 கிண்ணத்தை வென்ற இத்தாலியின் மற்றொரு வீரரான ஜியான்லுயீஜி டொனரூமாவிற்கு 'யாஷின் ட்ரோஃபி' எனும் ஆகச் சிறந்த கோல்காப்பாளுரக்கான விருது வழங்கப்பட்டது.

