சினம் கொண்ட ரொனால்டோ

சினம் கொண்ட ரொனால்டோ

1 mins read
8ce20949-45b1-4b02-9854-2e3ec13cdf67
லயனல் மெஸ்ஸியின் பரம வைரியாகக் கருதப்படும்கிறிஸ்டியானோ ரொனால்டோ.படம்: இபிஏ -

பாரிஸ்: 'பலோன் டு' வோர்' விருதை ஆக அதிக மறை வென்று லயனல் மெஸ்ஸியைப் பின்னுக்குத் தள்ளுவதுதான் தனது ஒரே குறிக்கோள் என்று இவ்விருதுகளின் ஏற்பாட்டாளர் திரு பாஸ்கல் ஃபெர கூறியதை கிறிஸ்டியானோ ரொனால்டோ கண்டித்துப் பேசியுள்ளார். 'பிரான்ஸ் ஃபுட்பால்' நாளிதழின் தலைமை ஆசிரியரான திரு ஃபெர பொய் சொல்கிறார் என்றார் ரொனால்டோ.

"பாஸ்கல் ஃபெர பொய் சொன்னார், எனது பெயரைப் பயன்படுத்தித் தான் பணியாற்றும் நாளிதழை விளம்பரப்படுத்துகிறார்," என்று 'பலோன் டு' வோர்' விருதை ஐந்து முறை வென்றுள்ள ரொனால்டோ இன்ஸ்டகிராம் வாயிலாகக் கூறினார். இது குறித்து மின்னஞ்சல்வழி அனுப்பப்பட்ட கேள்விக்கு 'பிரான்ஸ் ஃபுட்பால்' பதிலளிக்கவில்லை.