சுசுகி கிண்ணம் நேரடி ஒளிபரப்பு

சுசுகி கிண்ணம் நேரடி ஒளிபரப்பு

1 mins read

சிங்கப்பூர்: அடுத்த மாதம் நடைபெறவுள்ள சுசுகி கிண்ணக் காற்பந்துப் போட்டி ஆட்டங்களை இலவசமாக ஒளிபரப்பப்போவதாக மீடியாகார்ப் நிறுவனம் அறிவித்துள்ளது. தென்கிழக்காசியாவில் உள்ள தேசிய அணிகள் பங்கேற்கும் இப்போட்டி அடுத்த மாதம் ஐந்தாம் தேதி முதல் வரும் ஜனவரி மாதம் ஒன்றாம் தேதிவரை இடம்பெறவுள்ள ஆட்டங்கள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பாகும்.

ஆட்டங்களை மீடியாகார்ப்பின் தொலைக்காட்சி ஒளிவழிகளில் பார்க்கலாம். 'மீவாட்ச்' செயலியிலும் 'ஆன் டிமாண்ட்' வசதி மூலமும் பார்க்கமுடியும். ஆட்டங்களின் தருணங்களை 'மீவாட்ச்' செயலியிலும் மீடியாகார்ப்பின் 'யூட்டியூப்' ஒளிவழியிலும் கண்டு களிக்கலாம்.