பாரிஸ்: ஆகச் சிறந்த காற்பந்து வீராங்கனைக்கான 'பலோன் டு' வோர்' விருதைத் தட்டிச் சென்றுள்ளார் பார்சிலோனாவின் பெண்கள் அணித் தலைவர் அலெக்சியா புட்டெல்லாஸ். பெண்களுக்கான சாம்பியன்ஸ் லீக் போட்டியின் இறுதியாட்டத்தில் செல்சியை 4-0 எனும் கோல் கணக்கில் வென்றது பார்சிலோனா. அவ்வாட்டத்தில் கோல் போட்டார் 27 வயது புட்டெல்லாஸ். பெண்கள் சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை முதன்முறையாக வென்றது பார்சிலோனா. சென்ற பருவத்தில் ஐரோப்பாவிலேயே ஆக அதிக கோல்களைப் போட்ட மத்தியத் திடல் ஆட்டக்காரர் புட்டெல்லாஸ்.
ஆகச் சிறந்த காற்பந்து வீராங்கனை புட்டெல்லாஸ்
1 mins read
ஆகச் சிறந்த காற்பந்து வீராங்கனைக்கான 'பலோன் டு' வோர்' விருதை வென்றுள்ளார்ஸ்பெயினின் பார்சிலோனா அணியைச் சேர்ந்த அலெக்சியா புட்டெல்லாஸ் படம்: இபிஏ -