பூப்பந்து: கொடிகட்டிப் பறக்கும் சிங்கை வீரர்கள்

பூப்பந்து: கொடிகட்டிப் பறக்கும் சிங்கை வீரர்கள்

1 mins read

சிங்­கப்­பூர்: உலக பூப்பந்து ஆண்கள் ஒற்­றை­யர் தர­வ­ரி­சை­யில் 20வது இடத்­திற்­குத் தாவி­யுள்­ளார் சிங்­கப்­பூ­ரின் லோ கியென் யூ.

சுமார் ஏழே வாரங்­க­ளுக்கு முன்பு 41வது இடத்­தில் இருந்த லோ, நட்­சத்­தி­ர­மாக உரு­வெடுத்­து ­வ­ரு­கி­றார், இது­வரை காணாத முன்­னேற்­றத்தை அடை­கி­றார். தர­வரிசை­யில் முதல் 20 இடங்­களை வகிப்­போ­ரில் ஆறு பேரை எதிர்­பாராவித­மாக வென்று அசத்­தி­யுள்­ளார் இவர்.

மற்­றொரு சிங்­கப்­பூ­ர­ரான 22 வயது யோ ஜியா மின், பெண்­கள் ஒற்­றை­யர் தர­வ­ரி­சை­யில் 17வது இடத்­திற்கு முன்­னே­றி­யி­ருக்­கி­றார். உலக பூப்­பந்­துச் சம்­மே­ள­னம் நடத்­தும் பொது­வி­ரு­தின் இறு­திப் போட்­டி­யில் பங்­கேற்­க­வுள்ள முதல் சிங்­கப்­பூ­ரர் என்ற பெருமை யோவைச் சேரும்.