பாரிஸ்: பிரான்சின் பிஎஸ்ஜி காற்பந்து அணியின் நட்சத்திர விளையாட்டாளர் நெய்மார் காயமுற்றதால் ஆறிலிருந்து எட்டு வாரங்களுக்கு விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயின்ட் எட்டியென் அணிக்கு எதிரான பிஎஸ்ஜியின் ஆட்டத்தில் 29 வயது நெய்மாரின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அடுத்த ஆண்டு வரை அவரால் விளையாட முடியாது.
இவ்வாட்டத்தை 3-1 எனும் கோல் கணக்கில் வென்றது பிஎஸ்ஜி. பிஎஸ்ஜியின் மூன்று கோல்களையும் உருவாக்கினார் லயனல் மெஸ்ஸி.
பிரான்சின் 'லீக் ஒன்று' என்றழைக்கப்படும் லீக்கில் 12 புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தை வகிக்கிறது பிஎஸ்ஜி. இரண்டாம் இடத்தில் உள்ளது ஸ்டாட் ரெனே. லீக்கின் நடப்பு வெற்றியாளர் அணியான லீல் 13ஆம் இடத்தை வகிக்கிறது.

