கராச்சி: பாகிஸ்தான் செல்லும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணிக்கு எதிராக மூன்று டி20 போட்டிகளிலும் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாட இருக்கிறது. எல்லாப் போட்டிகளும் கராச்சி விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளன. டி20 போட்டித் தொடர் வரும் 13ஆம் தேதியும் ஒருநாள் போட்டித் தொடர் 18ஆம் தேதியும் தொடங்கவுள்ளன. இந்நிலையில், அப்போட்டிகளில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய டென்னிஸ் நட்சத்திரமான சானியா மிர்சாவின் கணவர் ஷோயப் மாலிக், சர்ஃபராஸ் அகமது, ஹசன் அலி ஆகிய மூவருக்கும் அணியில் இடமளிக்கப்படவில்லை.
டி20 அணி: பாபர் ஆசம் (தலைவர்), சதாப் கான், ஆசிஃப் அலி, ஃபகர் ஸமான், ஹைதர் அலி, ஹரிஸ் ரௌஃப், இஃப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகம்மது ஹஸ்னைன், முகம்மது நவாஸ், முகம்மது ரிஸ்வான், முகம்மது வாசிம் ஜூனியர், ஷாகீன் ஷா அஃப்ரிடி, ஷாநவாஸ் தகானி, உஸ்மான் காதிர்.
ஒருநாள் போட்டிகளுக்கான 17 பேர் கொண்ட அணியில் சௌத் ஷகீல், இமாம் உல் ஹக் ஆகியோருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.