முதலிரு இடங்களில் சிட்டி, லிவர்பூல்

2 mins read
01510aa6-147b-478f-b037-1d077e4474f7
வாட்ஃபர்ட் குழுவிற்கெதிரான ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டியின் இரண்டாவது கோலைப் போடும் பெர்னார்டோ சில்வா. படம்: ராய்ட்டர்ஸ் -

வெஸ்ட் ஹேமிடம் அதிர்ச்சித் தோல்வியுற்று பட்டியலில் மூன்றாமிடத்திற்கு இறங்கியது செல்சி

லண்­டன்: இப்­போ­தைக்கு இங்­கி­லிஷ் பிரி­மி­யர் காற்­பந்து லீக்­கில் இவர்­தான் சிறந்த ஆட்­டக்­கா­ரர் என்று மான்­செஸ்­டர் யுனை­டெட் நிர்­வாகி பெப் கார்­டி­யோ­லா­வின் புக­ழா­ரம் சூட்­டி­யது சரி­தான் என்­பதை மெய்ப்­பித்­துக்காட்­டினார்­ பெர்­னார்டோ சில்வா.

வாட்­ஃபர்ட் குழு­விற்கு எதி­ராக நேற்று முன்­தி­னம் நடந்த ஆட்­டத்­தில் சில்வா இரண்டு கோல்­களை அடிக்க, 2-1 என்ற கணக்­கில் சிட்டி வென்றது.

முன்­ன­தாக நடந்த ஆட்­டத்­தில், முதலி­டத்­தில் இருந்த செல்சி 2-3 என்ற கோல் கணக்­கில் வெஸ்ட் ஹேம் யுனை­டெட்­டி­டம் மண்­ணைக் கவ்­வி­யது.

இத­னால், சிட்டி குழு 35 புள்­ளி­களு­டன் முத­லி­டத்­திற்­குத் தாவி­யது.

சென்ற வார நடு­வில் ஆஸ்­டன் வில்லா குழு­விற்கு எதி­ராக அரு­மை­யா­ன­தொரு கோல் அடிக்க, சில்­வாவை இப்­ப­டிப் புகழ்ந்­தி­ருந்­தார் கார்­டி­யோலா.

"எனது வார்த்­தை­க­ளைப் பொய்­யாக்­காத பெர்­னார்­டோ­விற்கு நன்றி. தன்­னடக்­க­முள்­ள­வர் அவர். முன்­னணி வீரர்­கள் பலர் விளை­யா­டும் பிரி­மி­யர் லீக்­கில் அவர் சிறப்­பாக ஆடி வரு­கிறார்," என்­றார் கார்­டி­யோலா.

பிரி­மியர் லீக்கில் தாம் கடை­சி­யாக ஆடிய 12 ஆட்­டங்­களில் ஏழு கோல்­களைப் போட்­டுள்­ளார் சில்வா.

வாட்­ஃபர்­டுக்கு எதி­ரான ஆட்­டத்­தில், நான்­காம் நிமி­டத்­தி­லேயே சிட்டிக்கு முன்­னிலை பெற்­றுத் தந்­தார் ரஹீம் ஸ்டெர்­லிங். இது, பிரி­மி­யர் லீக்­கில் அவர் போட்ட 99வது கோல்.

கடை­சி­யில் கைகூ­டிய வெற்றி

இத­னி­டையே, நேற்று முன்­தி­னம் நடந்த மற்­றோர் ஆட்­டத்­தில், பிற்­பா­தி­யின் முடி­வில் இடை­நி­றுத்­தத்­திற்­கான கூடு­தல் நேரத்­தில் டிவக் ஒரிகி அடித்த கோலால், லிவர்­பூல் 1-0 என்ற கணக்­கில் உல்வ்ஸ் குழுவை வெற்­றி­கொண்­டது.

மாற்­று­வீ­ர­ராக வந்­த­போ­தும் ஆட்­டத்­தின் முடி­வைத் தீர்­மா­னம் செய்த 26 வயது ஒரி­கியை 'ஆட்­டத்தை முடித்து வைப்­ப­தில் வல்­ல­வர்' என்று வெகு­வாக மெச்­சி­னார் லிவர்­பூல் நிர்­வாகி யர்­கன் கிளோப்.

"ஒரு­நாள் என் பேரப்­பிள்­ளை­களை அழைத்­துச் சென்று, டிவக் ஒரி­கி­யின் சிலை­யைக் காட்­டு­வேன். என்ன ஓர் ஆட்­டக்­கா­ரர்!" என ஒரி­கியை வான­ளா­வப் புகழ்ந்­தார் சக லிவர்­பூல் வீர­ரான ஆண்டி ராபர்ட்­சன்.

லிவர்­பூல் சார்­பில் ஒரிகி பங்­கேற்ற 100வது ஆட்­டம் இது. அக்­குழு சார்­பில் லீக் போட்­டி­களில் இது­வரை 21 கோல்­க­ளைப் போட்­டுள்­ளார் அவர். அவற்­றில் கிட்­டத்­தட்ட பாதி கோல்­கள் மாற்று வீர­ரா­கக் கள­மி­றங்கி அடித்­தவை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இவ்­வெற்­றி­யைத் தொடர்ந்து, சிட்­டி­யை­விட ஒரு புள்ளி மட்­டுமே குறை­வா­கப் பெற்று, இரண்­டாம் இடத்­திற்கு முன்­னே­றி­யது லிவர்­பூல்.

முன்­ன­தாக, 87வது நிமி­டத்­தில் கோலை விட்­டுத் தந்து, வெஸ்ட் ஹேமி­டம் தோற்று அதிர்ச்­சி­ய­ளித்த செல்சி, 33 புள்­ளி­க­ளு­டன் மூன்­றா­மி­டத்­திற்­குத் தள்­ளப்­பட்­டது.