கோன்டே: கடினமான பருவம்

2 mins read
e3295328-2c1e-4d50-8011-7e1b9b3cd3cf
நார்விச் சிட்டிக்கு எதிரான ஆட்டத்தில் மூன்றாவது கோலை அடித்ததும் அம்மகிழ்ச்சியை சக ஸ்பர்ஸ் வீரர்கள் லூக்கஸ் மோரா (நடுவில்), பியர் எமில் ஹாய்பெர்க்குடன் (வலது) இணைந்து கொண்டாடும் ஹியுங் மின் சோன். படம்: ராய்ட்டர்ஸ் -

பிரிமியர் லீக் காற்பந்து: புள்ளிப் பட்டியலில் ஐந்தாம் நிலைக்கு முன்னேறியது ஸ்பர்ஸ்

லண்­டன்: இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் காற்­பந்­தில் நேற்று முன்­தி­னம் நார்­விச் குழுவை எதிர்­கொண்ட டோட்­டன்­ஹம் ஹாட்ஸ்­பர் குழு தொடர்ச்­சி­யாக 3வது வெற்­றி­யைப் பெற்­றது.

பாரிஸ் செயின்ட் ஜெர்­மைன் குழு­வி­லி­ருந்து 2018 ஜன­வரி மாதம் ஸ்பர்ஸ் குழு­வுக்கு வந்த லூக்­கஸ் மோரா ஆட்­டத்­தின் 10வது நிமி­டத்­தில் கோல் எல்­லைக்கு அப்­பால் இருந்து அரு­மை­யான கோல் ஒன்­றைப் போட்­டார்.

ஸ்பர்ஸ் குழு­வுக்கு இது­வரை அவர் 18 கோல்­கள் போட்­டுள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது. இவ­ரைத் தொடர்ந்து ஆட்­டத்­தின் 67, 77வது நிமி­டங்­களில் முறையே சான்­செஸ், ஹியுங் மின் சோன் ஆகி­யோர் மேலும் இரண்டு கோல்­கள் போட, ஸ்பர்ஸ் 3-0 என நார்­விச் குழுவை ஓரங்­கட்­டி­யது.

இதன்­மூ­லம், சாம்­பி­யன்ஸ் லீக் காற்­பந்­துப் போட்­டி­களில் தகு­தி­பெற பிரி­மி­யர் லீக்­கில் நான்­கா­வது நிலை­யி­லி­ருக்­கும் வெஸ்ட் ஹேம் குழு­வை­விட இரண்டு புள்­ளி­கள் மட்­டுமே குறை­வா­கப் பெற்று ஐந்­தாம் நிலைக்கு ஸ்பர்ஸ் குழு முன்­னே­றி­யுள்­ளது கவ­னிக்­கத்­தக்­கது (இன்று அதிகாலை நடக்கவிருந்த ஆர்சனல்-எவர்ட்டன் இடையிலான போட்டிக்கு முந்திய நிலவரம்).

எனி­னும், ஸ்பர்ஸ் குழுவை தற்­பொ­ழுது நிர்­வ­கித்து வரும் அன்­டோ­னியோ கோன்டே இதை­யெல்­லாம் பார்த்துப் பெரி­தாக மகிழ்ச்சி கொள்­வ­தாக இல்லை.

"எதிர்­கா­லத்­தில் போட்­டித்­தன்­மை­யு­டன் விளங்க வேண்­டு­மென்­றால், நாம் சரி­யான அடித்­த­ளம் அமைக்க வேண்­டும். அப்­போதுதான் முக்­கி­ய­மான விரு­து­களை வெல்ல முடி­யும்," என்று தமது குழு­வி­ன­ருக்கு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார்.

"ஸ்பர்ஸ் குழு­வைப் பொறுத்­த­வரை இது கடி­ன­மான பரு­வம்," என்று அவர் குறிப்­பிட்­டார்.

மற்­றோர் ஆட்­டத்­தில் புதிய நிர்­வா­கி­யான ரால்ஃப் ரானிக் மகிழ்ச்­சி­யு­றும் வித­மாக மான்­செஸ்­டர் யுனை­டெட் குழு கிரிஸ்­டல் பேலஸை 1-0 என்ற கோல் கணக்­கில் வெற்றி கொண்­டது.

கடந்த வாரம் ஆர்­ச­னல் குழுவை 3-2 என வெற்றி கொண்ட யுனை­டெட் முதல் பாதி ஆட்­டத்­தில் மிக­வும் விறு­வி­றுப்­பாக ஆடி ரசி­கர்­களை மகிழ்ச்­சிக் கட­லில் ஆழ்த்­தி­யது. இதில் குறிப்­பி­டத்­தக்க அம்­சம் என்­ன­வெ­னில் யுனை­டெட் கோல் எது­வும் விட்­டுக்கொடுக்­க­வில்லை. அத்­து­டன், பல சந்­தர்ப்­பங்­களில் குறை­கூ­றப்­படும் ஃபிரெட் என்ற குழு­வின் மத்­திய திடல் வீரர்­தான், ஆட்­டத்­தின் 78வது நிமி­டத்­தில், அதன் கோலைப் போட்­டார்.

இன்­னோர் ஆட்­டத்­தில் முத­லில் ஒரு கோலை விட்­டுக்­கொ­டுத்­த­போ­தும் மீண்­டெ­ழுந்­தது ஆஸ்­டன் வில்லா குழு. எஸ்ரி கோன்சா என்ற வீரர் போட்ட இரண்டு கோல்­க­ளால் வில்லா 2-1 என லெஸ்­டர் குழுவை வெற்­றி­கொண்­டது. இந்த வெற்­றி­யைத் தொடர்ந்து ஆஸ்­டன் வில்லா தர­வ­ரி­சைப் பட்­டி­ய­லில் 10ஆம் இடத்­திற்கு முன்­னே­றி­யது.