இந்திய அணிக்கு ஆகப் பெரிய வெற்றி; கோஹ்லி, அஸ்வின் புதிய சாதனை

மும்பை: நியூ­சி­லாந்து அணிக்­கு எ­தி­ரான இரண்­டா­வது டெஸ்ட் போட்­டி­யில் இந்­திய அணி 372 ஓட்ட வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற்­றது. டெஸ்ட் கிரிக்­கெட் வர­லாற்­றில் ஓட்ட எண்­ணிக்கை அடிப்­ப­டை­யில் இந்­திய அணிக்­குக் கிட்டிய ஆகப் பெரிய வெற்றி இது.

இரண்டு போட்­டி­கள் கொண்ட டெஸ்ட் தொட­ரின் முதல் போட்டி வெற்றி தோல்வி­ இன்றி முடிந்­தது.

இந்­நி­லை­யில், இரண்­டா­வது போட்டி கடந்த 3ஆம் தேதி மும்பை­யில் தொடங்­கி­யது.

முத­லில் பந்­த­டித்த இந்­திய அணி முதல் இன்­னிங்­சில் 325 ஓட்­டங்­களை எடுத்­தது. அதி­க­பட்­ச­மாக மயங்க் அகர்­வால் 150 ஓட்­டங்­க­ளைக் குவித்­தார். இந்­தி­யா­வில் பிறந்து, இப்­போது நியூ­சி­லாந்து அணிக்­காக விளை­யாடி வரும் இடக்கை சுழற்­பந்து வீச்­சா­ளர் அஜாஸ் பட்­டேல் பத்து விக்­கெட்­டு­க­ளை­யும் கைப்­பற்றி சாதனை படைத்­தார்.

ஆனா­லும், அவ­ரது இந்த அரிய சாதனை நியூ­சி­லாந்து அணிக்­குச் சாத­க­மாக அமை­ய­வில்லை. இந்­திய அணி­யி­ன­ரின் பந்­து­வீச்­சில் திண­றிய அவ்­வணி முதல் இன்­னிங்­சில் 62 ஓட்­டங்­க­ளுக்­குச் சுருண்­டது.

தொடர்ந்து 2வது இன்­னிங்­சைத் தொடங்­கிய இந்­திய அணி ஏழு விக்­கெட் இழப்­பிற்கு 276 ஓட்­டங்­களை எடுத்த நிலை­யில் பந்­த­டிப்பை முடித்­துக்­கொள்­வ­தாக அறி­வித்­தது. இம்­மு­றை­யும் அதி­க­பட்­ச­மாக அகர்­வால் 62 ஓட்­டங்­க­ளைச் சேர்த்­தார்.

அத­னைத் தொடர்ந்து, 540 ஓட்­டங்­கள் என்ற வெற்றி இலக்­கு­டன் 2வது இன்­னிங்­சைத் தொடங்­கிய நியூ­சி­லாந்து அணி மூன்­றாம் நாள் முடி­வில் ஐந்து விக்­கெட் இழப்­பிற்கு 140 ஓட்­டங்­களை எடுத்து இருந்­தது.

நேற்று நான்­காம் மேலும் 27 ஓட்­டங்­களை மட்­டும் சேர்த்து, எஞ்­சிய ஐந்து விக்­கெட்­டு­க­ளை­யும் இழந்து, படு­மோ­ச­மா­கத் தோற்­றது நியூ­சி­லாந்து. ஓட்ட எண்­ணிக்கை அடிப்­ப­டை­யில் இதுவே அவ்­வ­ணி­யின் ஆகப் பெரிய தோல்வி.

அகர்­வால் ஆட்ட நாய­க­னா­க­வும் இரு போட்­டி­க­ளி­லும் சேர்த்து 14 விக்­கெட்­டு­களைச் சாய்த்த அஸ்­வின் தொடர் நாய­கனா­க­வும் தேர்வு பெற்­ற­னர்.

நியூசிலாந்து அணி கடைசியாக 1988ஆம் ஆண்டில் மும்பை வான்கடே அரங்கில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இருந்தது.

அதன்பின், இந்தியாவில் 12 இருதரப்பு டெஸ்ட் தொடர்களில் பங்கேற்றுள்ளபோதும் அவ்வணியால் ஒருமுறைகூட வெற்றிக் கோட்டைத் தொட முடியவில்லை.

50, 50, 50 - ‘முதல்வன்’ கோஹ்லி

இவ்­வெற்­றியை அடுத்து, 50 டெஸ்ட் போட்­டி­கள், 50 ஒரு­நாள் போட்­டி­கள், 50 டி20 போட்­டி­களில் வெற்­றி­பெற்ற அணி­யில் இடம்­பி­டித்த முதல் ஆட்­டக்­கா­ரர் என்ற சாத­னை­யைப் படைத்­தார் விராத் கோஹ்லி.

அது­போல, 4வது முறை­யாக ஒரே ஆண்­டில் 50 விக்­கெட்­டு­க­ளுக்­கு­மேல் வீழ்த்தி சாதனை புரிந்­துள்­ளார் அஸ்­வின். கும்ளே, ஹர்­ப­ஜன் ஆகி­யோர் மும்­முறை இச்­சா­த­னையை நிகழ்த்­தி­யுள்­ள­னர். அத்­து­டன், சொந்த மண்­ணில் 300 விக்­கெட்­டு­க­ளுக்கு­மேல் வீழ்த்­திய 6வது வீரர் என்ற பெரு­மை­யும் அஸ்­வி­னைச் சென்­ற­டைந்­தது.

அத்­து­டன், இந்­தியா-நியூ­சி­லாந்து அணி­களுக்கு இடை­யி­லான டெஸ்ட் போட்­டி­களில் ஆக அதிக விக்­கெட்­டு­க­ளைக் கைப்­பற்­றி­ய­வர் என்ற சாத­னையை சர் ரிச்­சர்ட் ஹாட்­லி­யி­டம் இருந்து தட்­டிப் பறித்­தார் அஸ்­வின். ஹாட்லி 65 விக்­கெட்­டு­களை வீழ்த்­தி­யி­ருந்த நிலை­யில், அஸ்­வின் இப்­போது அவ­ரை­விட ஒரு விக்­கெட் கூடு­த­லாக வீழ்த்­தி­யுள்­ளார்.

தரவரிசையில் இந்தியா மீண்டும் முதலிடம்

நியூ­சி­லாந்து அணிக்­கெ­தி­ரான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்­கில் வென்­றதை அடுத்து, டெஸ்ட் போட்­டி­க­ளுக்­கான அனைத்­து­லக கிரிக்­கெட் மன்­றத்­தின் தர­வரி­சை­யில் இந்­திய அணி மீண்­டும் முத­ல் இ­டத்­திற்கு முன்­னே­றி­யுள்­ளது. முத­லி­டத்­தில் இருந்த நியூ­சி­லாந்து அணி இரண்­டா­மி­டத்­திற்கு இறங்­கி­யது. இந்­திய அணி 124 புள்­ளி­க­ளை­யும் நியூ­சி­லாந்து அணி அதை­விட மூன்று புள்­ளி­கள் குறை­வா­க­வும் பெற்­றுள்­ளன. சொந்த மண்­ணில் கடை­சி­யாக விளை­யா­டிய 14 டெஸ்ட் தொடர்­க­ளி­லும் இந்­தியா வென்­றுள்­ளது. அதில் 11 தொடர்­களில் விராத் கோஹ்லி தலை­மை­யில் இந்­திய அணி விளை­யா­டி­யது குறிப்­பி­டத்­தக்­கது. 2013ல் இங்கிலாந்து அணியிடம் 2-1 என்ற கணக்கில் தோற்றதே தாய்நாட்டில் இந்திய அணிக்குக் கிட்டிய கடைசி தோல்வி.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!