நெட்டோட்டம்: புதிய தேசிய சாதனை

1 mins read
0a0182cc-727d-4a3f-ae26-2fd292d2db25
-

ஈராண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாகப் பங்கேற்ற பந்தயம் என்றபோதும் பல இன்னல்களைக் கடந்து, தேசிய அளவில் புதிய சாதனை படைத்துள்ளார் சிங்கப்பூர் நெட்டோட்ட வீரர் சோ ருய் யோங் (படம்). ஸ்பெயினின் வெலன்சியா நகரில் நேற்று முன்தினம் நடந்த பந்தயத்தை 2 மணி 2 நிமிடம் 59 நொடிகளில் முடித்து, தனது சொந்த சாதனையையே முறியடித்தார் சோ. தமது முன்னைய சாதனையைக் காட்டிலும் இம்முறை பந்தயத்தை முடிக்க 45 வினாடிகள் குறைவாக எடுத்துக்கொண்டார் இவர். இதன்மூலம் அடுத்த ஆண்டு செப்டம்பரில் சீனாவில் ஹாங்ஸோ நகரில் நடக்க இருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான, சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றம் நிர்ணயித்துள்ள தகுதி நேரத்தையும் இவர் விஞ்சிவிட்டார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குத் தேர்வு செய்யப்படும் பட்சத்தில், அந்தப் போட்டிகளில் பங்கேற்கும் முதல் சிங்கப்பூர் நெட்டோட்ட வீரர் என்ற பெருமை இவரைச் சென்றுசேரும்.